#JUST IN: "உதயநிதி ஸ்டாலின் முதல்வராக மாட்டார்" பியூஸ் கோயல் அதிரடி கருத்து.!

Udhayanidhi Stalin
Piyush goyal
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக இம்முறை ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரவும், அதிமுக - பாஜக கூட்டணியின் வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்தவும் பாஜக தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் ஒருபோதும் தமிழ்நாட்டின் முதல்வராக மாட்டார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS: ஆன்லைன் மோசடிக்கு செக்: ₹10,000-க்கு மேல் அனுப்பினால் உடனே போகாது.!
Udhayanidhi Stalin

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக பியூஸ் கோயல் செயலாற்றி வருகிறார். கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பியூஸ் கோயல் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்து செல்கிறார்.

இந்நிலையில் தமிழகத்தின் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின், முதல்வராக மாட்டார் என்ற பரபரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார் பியூஸ் கோயல்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “உதயநிதி கருத்தால் தமிழகப் பண்பாடு புண்பட்டுள்ளது. வருங்காலத்தில் அவர் ஒருபோதும் தமிழ்நாட்டின் முதல்வராக மாட்டார். நடக்கவிருக்கும் தேர்தலில் ஆட்சி மாற்றம் நிச்சயம். ஆட்சி மாற்றத்திற்கு தமிழக மக்கள் தயாராக உள்ளனர்” என பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: அமலுக்கு வரும் ஈரான் மீதான கடல்வழி முற்றுகை.! இனி ஹார்மூஸ் தேவையே இல்லை.!
Udhayanidhi Stalin
logo
Kalki Online
kalkionline.com