#JUST IN: அமலுக்கு வரும் ஈரான் மீதான கடல்வழி முற்றுகை.! இனி ஹார்மூஸ் தேவையே இல்லை.!

Strait of Hormuz
America - Iran
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மீண்டும் தீவிரம் அடைந்துள்ள நிலையில, ஈரானின் கடல் வழிப் போக்குவரத்தை முற்றுகையிட அமெரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது.

இந்தப் போரில் ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஹார்மூஸ் ஜலசந்தி மூடி இருப்பதால் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS: ஆன்லைன் மோசடிக்கு செக்: ₹10,000-க்கு மேல் அனுப்பினால் உடனே போகாது.!
Strait of Hormuz

கடந்த வாரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும், இஸ்ரேல் லெபனானை தாக்கியதால் மீண்டும் ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டது. தற்போது ஹார்மூஸை திறக்காவிட்டால் ஈரானை பலமாக தாக்குவோம் என அமெரிக்கா அதிபர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதோடு ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி நிலையங்களை ஒரு மணி நேரத்தில் அழித்து விடுவோம் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவிடம் ஈரான் பணிந்து தான் ஆக வேண்டும். அமெரிக்காவின் கோரிக்கைகளை ஈரான் ஏற்கும். பேச்சுவார்த்தைக்கு ஈரானிடம் எவ்வித வலிமையான ஆதாரமும் இல்லை என டிரம்ப் தெரிவித்துளளார். ஈரான் கடல்வழி முற்றுகையிடப்படுவதால், இனி உலக நாடுகள் ஹார்மூஸை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இருக்காது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஈரான் துறைமுகங்களைப் பயன்படுத்தும் கப்பல்களை முடக்க அமெரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. மாறாக ஹார்மூஸ் வழியாக சேலம் கப்பல்களுக்கு தடை இல்லை என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆனால் டிரம்பின் மிரட்டல்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: இனி இந்த படிப்பு கிடையாது.! B.Ed படிப்புகளில் அதிரடி மாற்றம்.!
Strait of Hormuz
logo
Kalki Online
kalkionline.com