#BREAKING: சொன்னதை செய்த இந்தியா! ஒரே போன் கால்.. இந்திய கப்பல்களுக்கு வழிவிட்ட ஈரான்.!

Indian Ships Crossed Strait of Hormuz
India - Iran
Published on

மேற்காசிய நாடுகளில் நடந்து வரும் கடுமையான போர் காரணமாக ஹார்மூஸ் ஜலசந்தியை மூடியது ஈரான் அரசு. இதன் காரணமாக இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு மிகப் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் இரண்டு எண்ணெய் கப்பல்களுக்கு இன்று அனுமதி வழங்கியுள்ளது ஈரான் அரசு. இதற்கு முன்னதாக சீனா மற்றும் வங்கதேச கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது

சற்றுமுன் கிடைத்த அதிகாரப்பூர்வ தகவலின் படி, ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அரசு அனுமதி அளித்துள்ளது. நேற்று மாலை ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சியுடன், இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது இந்திய கப்பல்களுக்கு ஈரான் அரசு ஹார்மூஸ் ஜலசந்தியில் வழிவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். ஈரான் மட்டுமின்றி பிரான்ஸ் மற்றும் ரஷ்யா வெளியுறவு அமைச்சர்களுடனும், ஜெய்சங்கர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று ஈரான் அரசு, இன்று இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி புஷ்பக் மற்றும் பரிமல் ஆகிய இரண்டு இந்திய எண்ணெய் கப்பல்கள் தற்போது ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்துள்ளது.

வளைகுடா நாடுகளில் இருந்து இந்திய வரும் எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதையும் படியுங்கள்:
#JUST IN: சிலிண்டர் இல்லனா போன் வேலை செய்யாது..! – அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்..!
Indian Ships Crossed Strait of Hormuz

சீனா மற்றும் வங்கதேச கப்பல்களுக்கு அடுத்து, தற்போது ஹார்மூஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு ஈரான் அரசு அனுமதி வழங்கியிருப்பது, இந்திய மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

இருப்பினும் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பா நாடுகளைச் சேர்ந்த கப்பல்களுக்கு ஈரான் அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.

இந்திய கப்பல்களுக்கு தற்போது அனுமதி கிடைத்துள்ள நிலையில், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு விரைவில் முடிவுரை எழுதப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதோடு இந்தியாவின் எரிபொருள் சங்கிலி சமநிலையாக இருப்பதையும் இது உணர்த்துகிறது. மேலும் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு இருக்கும் பலமும் இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
எகிறும் பெட்ரோல், டீசல் விலைக்கு கடிவாளம் போடும் அமெரிக்கா.! டிரம்ப் அதிரடி அறிவிப்பு.!
Indian Ships Crossed Strait of Hormuz

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com