#BIG NEWS : வரலாற்றிலேயே முதல்முறை! 2 லட்சத்தை கடந்த விமான எரிபொருள் விலை..!

Flight fuel cost
Fuel cost
Updated on

கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்தியாவில் விமான எரிபொருள் விலை 2 மடங்கு உயர்த்தப்படுவதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை 115% உயர்ந்த நிலையில், சென்னையில் 1 கிலோ லிட்டர் ரூ.2.14 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

இந்தியாவில் விமான எரிபொருள் விலைகள் 2001-ஆம் ஆண்டு கட்டுப்பாட்டில் இருந்து நீக்கப்பட்டன. சர்வதேச அளவுகோல்களின் அடிப்படையில் இந்த விலைகள் மாதந்தோறும் மாற்றியமைக்கப்படுகின்றன.

தற்போது ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதாலும், உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலாலும், ஏப்ரல் 1 முதல் உள்நாட்டு சந்தையில் விமான எரிபொருள் விலை 100 சதவீதத்திற்கும் மேலாக உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: தவெக வேட்பாளர் பட்டியலில் முக்கிய மாற்றம்.!
Flight fuel cost

உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு 25 சதவீத (லிட்டருக்கு ரூ. 15 மட்டுமே) விலை உயர்வு மட்டுமே படிப்படியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்கள், உலகின் பிற பகுதிகளில் நிலவும் விலைக்கு இணையாக முழுமையான விலை உயர்வைச் செலுத்த வேண்டும்.

சர்வதேச சந்தையில் விலை கடுமையாக உயர்ந்த போதிலும், இந்தியப் பயணிகளின் நலன் கருதி உள்நாட்டு விமான எரிபொருள் விலை உயர்வு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: மொடக்குறிச்சியில் களமிறங்கும் அண்ணாமலை.! பாஜக-வின் பலே திட்டம்.!
Flight fuel cost
logo
Kalki Online
kalkionline.com