#BREAKING: தங்கம் விலை ரூ.800 உயர்வு.! இல்லத்தரசிகள் ஷாக்.!

Gold Price
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வை நோக்கியே பயணித்து வருகிறது. இதன் காரணமாக எப்போதும் இல்லாத அளவில் நடப்பாண்டில் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தைக் கடந்தது.

தங்கத்தின் இந்த விலையேற்றம் இல்லத்தரசிகள் மததியில் கவலையை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாகவே இருக்கிறது.

நேற்று ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.480 குறைந்து, ரூ.1,12,800-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.14,100-க்கு விற்பனையானது. அதேபோல் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.265-க்கு விற்பனையானது.

இதையும் படியுங்கள்:
அவசர காலங்களில் உங்களுக்கு உதவும் உதவி எண்கள் இதோ!
Gold Price

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.800 உயர்ந்து, ரூ.1,13,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.100 உயர்ந்து ரூ.14,200-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 அதிகரித்து ரூ.270-க்கு விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்:
பொதுமக்களே உஷார்.! இதை செய்தால் உங்கள் தகவல்கள் திருடப்படும்..!!
Gold Price
logo
Kalki Online
kalkionline.com