#BREAKING: தங்கம் விலை ரூ.240 உயர்வு.!

Gold Price
Gold Price
Updated on

கடந்த சில மாதங்களாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக எப்போதும் இல்லாத அளவில் நடப்பாண்டில் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தைக் கடந்து, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தங்கத்தின் இந்த விலையேற்றம் இல்லத்தரசிகள் மததியில் கவலையை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாகவே இருக்கிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், தங்கம் விலை மாற்றமின்றி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,13,600-க்கு விற்பனையானது. அதேபோல் வெள்ளி விலையும் மாற்றமின்றி ரூ.270-க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்து, ரூ.1,13,840-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.14,230-க்கு விற்பனையாகிறது.

கடந்த வார இறுதியில் தங்கத்தின் விலை ரூபாய் ₹800 உயர்ந்த நிலையில் இன்று ரூபாய் 240 உயர்ந்திருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
உங்க அக்கவுண்டுக்கு திடீர்னு பணம் வந்துருச்சா? உஷார்! புது வகை மோசடியாக இருக்கலாம்!
Gold Price

ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.270-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,70,000-க்கு விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்:
தங்கம் விலையை மிஞ்சும் இளைஞர்களின் மன அழுத்தம்.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
Gold Price

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com