#BREAKING: தங்கம் விலை அதிரடி சரிவு.! ரூ.1,040 குறைந்தது.!

Gold Price
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

கடந்த சில மாதங்களாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக எப்போதும் இல்லாத அளவில் நடப்பாண்டில் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தைக் கடந்து, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தங்கத்தின் இந்த விலையேற்றம் இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி வரும் நிலையில், முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாகவே இருக்கிறது.

நேற்று (ஏப்ரல் 27) ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,13,840-க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,040 குறைந்து, ரூ.1,12,800-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.130 குறைந்து ரூ.14,100-க்கு விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்.!! இனி சைக்கிள் விலையில் இ-பைக் கிடைக்கும்.!
Gold Price

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 குறைந்து ரூ.265-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,65,000-க்கு விற்பனையாகிறது.

நேற்று வாரத் தொடக்கத்தில் தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்த நிலையில், இன்று ரூ.1,040 குறைந்திருப்பது, இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்: பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்ய இனி 55 நிமிடங்கள் போதும்.!
Gold Price
logo
Kalki Online
kalkionline.com