#BREAKING: வருமான வரித்துறை பிடியில் செல்வப் பெருந்தகை.! பரபரக்கும் அரசியல் களம்.!

Selvaperundhagai
Selvaperundhagai
Updated on

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிய உள்ள சூழலில் முன்னணி கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, வருமானவரித் துறையினர் தன்னை சிறைப் பிடித்துள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகத்தின் கன்னியாகுமரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

இந்நிலையில் கன்னியாகுமரிக்கு செல்ல இருந்த செல்வப்பெருந்தகையை வருமான வரித்துறை அதிகாரிகள் சிறைப் பிடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: விருதுநகர் வெடி விபத்திற்கு காரணம் இதுதான்.! வெளியானது முதல் தகவல் அறிக்கை.!
Selvaperundhagai

இதுகுறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிவிப்பில், “பரப்புரைக்கு செல்ல விடாமல், இந்தி பேசும் வருமான வரித்துறை அதிகாரிகள் என்னை சிறை பிடித்துள்ளனர். என்னுடைய அரசியல் கடமைகளை செய்ய விடாமல் சோதனை என்ற பெயரில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் என்னை சிறை பிடித்துள்ளனர்.

இது ஜனநாயக செயலுக்கு எதிரானது மட்டுமின்றி, எதிர்க்கட்சியின் அரசியல் நோக்கமுள்ள செயல். மத்திய அரசு அமைப்புகளை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துவது கவலை அளிக்கிறது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: அதிமுக அடிமை கட்சி கிடையாது.! பதிலடி கொடுத்த இபிஎஸ்.!
Selvaperundhagai

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com