#BREAKING: இடைக்கால பட்ஜெட் 2026 - தொழில்துறைக்கான சிறப்பு அறிவிப்புகள் இதோ.!

Tamilnadu Budget 2026
Budget 2026
Updated on

2026-2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட் இன்று காலை 9:30 மணி முதல் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். இந்த முறையும் காகிதம் இல்லாத பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படுகிறது.

நடப்பு ஆட்சியின் கடைசி பட்ஜெட் இது என்பதால், அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போது இடைக்காலப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இடைக்கால பட்ஜெட்டில் தொழில்துறைக்கான அறிவிப்புகள்:

* தொழில்துறைக்கு ரூ.4,882 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தொழில்துறையை வலுப்படுத்த ரூ.12.3 லட்சம் கோடிகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

* ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அதிகரிக்க பல்வேறு சலுகைகளும் மானியங்களும் வழங்கப்பட்டதால், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 5 மடங்கு உயர்ந்துள்ளன.

* செமி கண்டக்டர் இயக்கத் திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* திருச்சி, ஓசூர் மற்றும் மதுரையில் புதிய டைடல் பாரக் அமைக்க ரூ.1,070 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.1,996 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 100 பில்லியன் பசுமை மின்னாற்றலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* ஆண்டுதோறும் ரூ.2.5 லட்சம் கோடி அளவிலான தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றுமதி செய்யப்படுகிறது.

* கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சுமார் 40 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன

இதையும் படியுங்கள்:
#BREAKING: இடைக்கால பட்ஜெட் 2026 - மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்புகள்.!
Tamilnadu Budget 2026

* எரிசக்தி துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நீர்வளத் துறைக்கு ரூ.10,076 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 11.19% பொருளாதார வளர்ச்சியை எட்டி நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

* கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் கொண்டு வருவதற்காக தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

* தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு ரூ.4,282 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: இடைக்கால பட்ஜெட் 2026.! 23 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வீட்டுமனை பட்டா.!
Tamilnadu Budget 2026
logo
Kalki Online
kalkionline.com