ரசிகர்களுக்கு அதிர்ச்சி.! ஐபிஎல் 2026 தொடக்க நிகழ்ச்சிகள் ரத்து.!

IPL 2026
IPL 2026
Published on

ஐபிஎல் தொடரின் 19 ஆவது சீசன் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

பொதுவாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டிக்கு முன்பாக தொடக்க நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். ஆனால் இம்முறை தொடக்க நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். ஆனால் இறுதிப் போட்டியின் போது கலை நிகழ்ச்சிகள் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, கடந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அசத்தியது. கிட்டத்தட்ட 17 சீசன்களுக்குப் பிறகு 18வது சீசனில் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை பெங்களூர் அணி வென்றதால், அதனை கொண்டாடும் வகையில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கடந்த ஆண்டு வெற்றி விழா நடத்தப்பட்டது.

இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 11 ரசிகர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த உயிரிழப்பு குறித்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த கூடாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு, தற்போது மீண்டும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு கூட்ட நெரிசலில் உயிரிழந்த ரசிகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நடப்பாண்டு தொடங்கும் ஐபிஎல் போட்டியின் போது தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெறாது என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும் இறுதிப் போட்டிகள் பிரம்மாண்டமாக நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது

இதையும் படியுங்கள்:
கல்லூரி அணி டூ சர்வதேச அணி! ஹென்ரிச் கிளாசெனின் கிரிக்கெட் பயணம்!
IPL 2026

* மைதானத்தில் உயிரிழந்த 11 பேரின் நினைவாக 11 இருக்கைகள் நிரந்தரமாக ஒதுக்கப்பட்டு, அவை எந்தப் போட்டியின் போதும் யாருக்கும் விற்கப்படாது.

* மைதானத்தின் உட்புற நுழைவு வாயிலில் அவர்களுக்கு ஒரு நினைவுப் பலகை திறக்கப்பட உள்ளது.

* மார்ச் 28 அன்று நடக்கும் முதல் போட்டியில், பெங்களூர் அணி வீரர்கள் தங்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாட உள்ளனர்.

* இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடக்காமல் இருக்க ரூ.7 கோடி செலவில் AI தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கூட்ட மேலாண்மை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஐபிஎல் தொடக்கப் போட்டியின் போது நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிப்பது வழக்கம். ஆனால் இம்முறை தொடக்க நிகழ்ச்சி செய்யப்பட்டுள்ளதால், கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் இறுதிப் போட்டியில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக முதல் போட்டி எவ்வித ஆரவாரமும் இன்றி சாதாரணமாகவே நடைபெறும். ஐபிஎல் தொடரின் தொடக்க நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால், ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

இதையும் படியுங்கள்:
கிரிக்கெட் வீரராக ஆசைப்பட்ட உசேன் போல்ட்..! ஓட்டப்பந்தய வீரரானது எப்படி தெரியுமா?
IPL 2026

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com