

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தவெக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய இருப்பது உறுதியாகியுள்ளது. 108 இடங்களில் தவெக வெற்றி பெற்றிருந்தாலும் கூட விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ய இருப்பதால், பலம் 107 ஆக குறைந்து விடும்.
இந்நிலையில் 2-ம் இடம் பிடித்த திமுக கூட்டணி 73 இடங்களைப் பிடித்துள்ளது. இதில் திமுக மட்டும் தனியாக 59 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவைச் சேர்ந்த 16 அமைச்சர்கள் தவெக வேட்பாளர்களிடம் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சற்று முன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, பொறுப்பு ஆளுநரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் மு.க.ஸ்டாலின். ஆட்சியில் இருந்தவரை மக்களுக்கான நலத்திட்டங்களை திட்டினோம்.
தற்போது எதிர்ச் கட்சியாக மக்களின் கோரிக்கைகளை முன் வைப்போம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களின் தீர்ப்பை முழுமையாக ஏற்கிறேன். அதே நேரம் நம்மை விட கூடுதலான இடங்களை வென்ற கட்சி 3.52 சதவீதம் வாக்குகளை மட்டுமே அதிகமாக பெற்றுள்ளது.
பல வெற்றிகளை கண்ட திமுக கழகம் தோல்விகளையும் கண்டுள்ளது. இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு வருவோம்; தோல்வியே பெற்றாலும் வலிமையுடன் இருக்கிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் வலிமையான எதிர்க்கட்சி ஆக எங்களது பணிகளை திறம்பட செய்வோம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க முன்னணி கட்சிகள் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன. இருப்பினும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளிக்காது என வைகோ சற்று முன் தெரிவித்துள்ளார்.