#JUST IN: உடனே கடைக்கு போங்க..! மளமளவென குறைந்தது தங்கம் விலை.!

Gold Price today
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாக உச்சத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடப்பாண்டில் ரூ.1 லட்சத்தைக் கடந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாகவே இருக்கிறது.

கடந்த வாரத் தொடக்கத்தில் சரிவை நோக்கிய தங்கத்தின் விலை, அதன்பிறகு ஏறுவதும் இறங்குவதுமாகவே இருந்தது. கடந்த 2 நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.14,000-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,000-க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கு விற்பனையானது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், டாலர் சரிவு, பங்குச்சந்தை சரிவு மற்றும் உலகளாவிய போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையில் தினந்தோறும் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் தங்கத்தின் விலையை அதிகம் பாதிக்கிறது.

இந்நிலையில் நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (மே 5) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,440 குறைந்து, ரூ.1,10,560-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.180 குறைந்து ரூ.13,820-க்கு விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்:
தங்கம், வெள்ளி அல்ல… செல்வ வளத்தை உருவாக்கும் ரகசியம் இதுதான்!
Gold Price today

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.265-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,65,000-க்கு விற்பனையாகிறது.

கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றமில்லாத சூழலில், இன்று ரூ.1,440 குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
தங்கம், வெள்ளியை விடுங்க... அதிக லாபம் தரும் உலோகம் இதுதான்.!
Gold Price today
logo
Kalki Online
kalkionline.com