#BREAKING: இனி ஆண்டுக்கு 2 முறை மட்டுமே CA இறுதித் தேர்வு.! ICAS அதிரடி அறிவிப்பு.!

CA (Chartered Accountant)
CA (Chartered Accountant)Credits: Hayvenhursts
Updated on

ஆண்டுக்கு 3 முறை நடைபெற்று வந்த CA இறுதித் தேர்வு, இனி 2 முறை மட்டுமே நடைபெறும் என இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) அறிவித்துள்ளது. இதன்படி பட்டய கணக்காளர் (CA) இறுதித் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் நவம்பரில் மட்டுமே நடைபெறும்.

CA தேர்வு முதல்நிலை, இடைநிலை மற்றும் இறுதித் தேர்வு என 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக 3 கட்ட தேர்வுகளும் ஆண்டுக்கு 2 முறை மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இதில் முதல்நிலை மற்றும் இடைநிலை தேர்வுகள் ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும் என 2024-ல் அறிவிக்கப்பட்டது.

பிறகு CA இறுதி கட்ட தேர்வும் ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும் என கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது CA இறுதித் தேர்வு இரண்டு முறையாக குறைக்கப்பட்டுள்ளது

இதையும் படியுங்கள்:
#BREAKING: 10-ம் வகுப்பு ரிசலட் தேதி இதுதான்.! விடைத்தாள்களை திருத்த 6 நாட்கள் மட்டுமே.!
CA (Chartered Accountant)

இதற்கு முன்னதாக ஜனவரி, மே மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் 3 முறை நடத்தப்பட்ட இறுதித் தேர்வு, இனி மே மற்றும் நவம்பரில் மட்டுமே நடைபெறும். இதன்மூலம் மாணவர்களுக்கு கிடைத்த ஒரு கூடுதல் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் சிஏ தேர்வு மிக கடுமையான தேர்வாகப் பார்க்கப்படும் நிலையில், ICAS-ன் இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

இறுதித் தேர்வு மட்டுமே 2 முறையாக குறைக்கப்பட்டுள்ளது. மற்றபடி முதல் மற்றும் இரண்டாம் நிலை தேர்வுகள் ஆண்டுக்கு 3 முறை நடைபெறும்.

இதையும் படியுங்கள்:
சாதனையின் உச்சம்: ஆர்டெமிஸ் குழுவின் கண்களில் சிக்கிய அரிய சூரிய கிரகணம்.!
CA (Chartered Accountant)
logo
Kalki Online
kalkionline.com