#JUST IN: தென் மாவட்டங்களில் விஜய்.. களத்தில் இறங்கிய செங்கோட்டையன்.! வெளியானது முக்கிய தகவல்.!

TVK Vijay
TVK Vijay
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தமிழக சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார்.

வேட்பு மனுத் தாக்கல் செய்த கையோடு, திருச்சி கிழக்கு தொகுதியில் பரப்புரையை தொடங்குகிறார் விஜய். இதற்கு அடுத்தப்படியாக விஜய் பரப்புரை குறித்த அடுத்தகட்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இதன்படி தென்மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து வருகின்ற ஏப்ரல் 7-ம் தேதி திருநெல்வேலியில் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார் விஜய்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்: பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்ய இனி 55 நிமிடங்கள் போதும்.!
TVK Vijay

திருநெல்வேலியில் உள்ள சுத்தமல்லியில் தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்ட வேட்பாளர்கள் 22 பேரையும் ஒரே மேடையில் ஏற்றி பிரச்சாரம் செய்ய இருக்கிறார் விஜய். இதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று நெல்லைக்கு புறப்பட்டு உள்ளார்.

தமிழக அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று திருச்சி மற்றும் கரூரில் பிரச்சாரத்தை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், இன்று ஈரோட்டில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

நாளை (மார்ச் 03) ஆற்காடு பேருந்து நிலையம் அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பில் ஈடுபடவுள்ளார்.

இதையும் படியுங்கள்:
வாட்ஸ்அப்பை பயன்படுத்த இனி போன் நம்பர் தேவையில்லை.! புதிய வசதி விரைவில் அறிமுகம்.!
TVK Vijay
logo
Kalki Online
kalkionline.com