பிரதமரின் சென்னை பிரச்சாரம் ரத்து.! பாஜக-வில் விஸ்வரூபம் எடுக்கும் உட்கட்சி மோதல்.!

Modi & Annamalai
Modi
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சூழலில், வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. இருப்பினும் என்று புனித வெள்ளி விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக ஏப்ரல் 4 மற்றும் 6 ஆகிய இரண்டு தேதிகளில் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும்.

இந்நிலையில் இன்னமும் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் இறுதி வேட்பாளர் பட்டியல் முடிவாகவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படியுங்கள்:
#BREAKING: சாத்தான்குளம் வழக்கு : தண்டனை மீண்டும் ஒத்திவைப்பு..!
Modi & Annamalai

பாஜகவில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவை வடக்கு தொகுதி தான் வேண்டும் என உறுதியாக உள்ளார். மேலும் தனது ஆதரவாளருக்கு சீட் கிடைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இதன் காரணமாக பாஜகவின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலையொட்டி புதுச்சேரி மற்றும் சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்ள இன்று புதுச்சேரிக்கு வரும் பிரதமர் மோடி, நாளை சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் பாஜகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதலால் சென்னையில் பிரதமர் மோடியின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை வடக்கு தொகுதி தவிர வேறு தொகுதியில் நான் போட்டியிட மாட்டேன் என அண்ணாமலை உறுதியாக இருப்பதால், அவர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது கடினம் என்றே தெரிகிறது. இதன் காரணமாக அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
#BREAKING : இனி சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனை கிடையாது.! ஜன் விஸ்வாஸ் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்.!
Modi & Annamalai
logo
Kalki Online
kalkionline.com