#JUST IN: நாங்கள் ஏன் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வேண்டும்?பாஜக தேசிய தலைவர் பரபரப்பு கருத்து..!

Nithin Nabin - Vijay
Vijay
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்நிலையில் அடுத்து நடக்கவிருக்கும் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று வரப் போகிறது. மே 4-ம் தேதி வெளியாகும் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க தேர்தல் முடிவுகள், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும். இந்த இரண்டு மாநிலங்களிலும் நிச்சயமாக மாற்றம் வரும்.

நாங்கள் ஏன் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வேண்டும்? ஏற்கனவே பாஜக, அதிமுக-வுடன் வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ளது. அரசியலில் ஈடுபடுபவர், முழு நேரமாக தன்னை அரசியலில் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். விஜய் அரசியலில் இன்னும் பார்க்க வேண்டியது அதிகமுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: இனி இந்த படிப்பு கிடையாது.! B.Ed படிப்புகளில் அதிரடி மாற்றம்.!
Nithin Nabin - Vijay

தமிழக அரசியல் களத்தில் விஜய் வாக்குகளை பிரிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாஜகவும் தமிழகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள போராடி வருகிறது. இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS: மீண்டும் மூடப்பட்ட ஹார்மூஸ் ஜலசந்தி.! இஸ்ரேலுக்கு பாடம் புகட்டும் ஈரான்.! கதிகலங்கும் டிரம்ப்.!
Nithin Nabin - Vijay
logo
Kalki Online
kalkionline.com