

சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட கருணாஸ் பின்னடைவை சந்தித்துள்ளார் திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார் தமிழ்நாடு, அசாம், கேரளம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) நடைபெற்று கொண்டிருக்கிறது. தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது திமுக முன்னிலையில் இருந்தது.
ஆனால் மின்னணு வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணத் தொடங்கியதும், தவெக முன்னிலை பெறத் தொடங்கியுள்ளது. திராவிட கட்சிகளை பின்னுக்குத் தள்ளி, புதிதாக களம் கண்ட தவெக தமிழக அரசியல் களத்தையே புரட்டிப் போட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகம் தற்போது முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் விஜய் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கிள்ளியூரில் தவெக வேட்பாளர் சபின் முன்னிலை வகிக்கிறார்.
போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஓபிஎஸ் பின்னடைவை சந்தித்துள்ளார.
விருத்தாச்சலம் தொகுதியில் ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்த தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார்.
திருவெறும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பின்னடைவை சந்தித்துள்ளார்.
ஒரத்தநாடு தொகுதியில் ஆரம்பத்தில் பின்தங்கி இருந்த திமுக வேட்பாளர் வைத்திலிங்கம் தற்போது முன்னிலை பெற்றுள்ளார்.
விளவங்கோடு தொகுதியில் பாஜக வேட்பாளர் விஜயதாரணி பின்னடைவை சந்தித்துள்ளார்.
போடிநாயக்கனூர் தொகுதியில் தவெக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவு வரும் நிலையில், சற்று முன் பின்தங்கியிருந்த ஓபிஎஸ் தற்போது முன்னிலை பெற்றுள்ளார்.
கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
திமுகவில் இருந்து பிரிந்து சென்று தவெக-வில் இணைந்த விஎஸ் பாபு, கொளத்தூர் தொகுதியில் முதல்வரை எதிர்த்து போட்டியிட்டு தற்போது 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
திருச்சி மேற்கில் கே.என்.நேரு, சைதாப்பேட்டையில் மா சுப்பிரமணியன், துறைமுகம் தொகுதியில் சேகர்பாபு மற்றும் காட்பாடி தொகுதியில் துரைமுருகன் ஆகிய திமுக அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
தருமபுரி மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளில் பாமக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட கருணாஸ் பின்னடைவை சந்தித்துள்ளார்.
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முன்னிலை வகிக்கிறார்.
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி முன்னிலை வகித்தாலும், மிகக் குறைந்த வித்தியாசம் தான் என்பதால், பின்னடைவு சந்திக்க வாய்ப்புள்ளது.
ஆவடி தொகுதியில் அமைச்சர் கிட்டதட்ட 8000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னிலையில் இருக்கிறார்.
முன்னிலை நிலவரம் ஏறி ஏறி இறங்குவதால் தமிழ்நாட்டில் யார் ஆட்சியைப் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நான்காவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில், காரைக்குடி தொகுதியில் மூன்றாம் இடத்திலேயே நீடிக்கிறார் சீமான்.
ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் அப்பாவு பின்னடைவு.
நத்தம் தொகுதியிலும் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகிக்கிறது. ர
தவெக வேட்பாளர் நிர்மல் குமார் திருப்பரங்குன்றம் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
ஆலந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அன்பரசன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
வில்லிவாக்கம் தொகுதியில் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா முன்னிலை வகிக்கிறார்.
தற்போது வரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளில் தவெக 4%, அதிமுக 3.4%, திமுக 3.2%, நாதக 0.4% வரையிலான வாக்குகளைப் பெற்றுள்ளன.
4 சுற்றுகளின் நிலவரப்படி தவெக 100, அதிமுக 79, திமுக 52, புதிய தமிழகம் 1 தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.
அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் பாஜக முன்னிலை வகிக்கிறது.