தமிழ்நாடு, அசாம், கேரளம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) நடைபெற்று கொண்டிருக்கிறது. தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது திமுக முன்னிலையில் இருந்தது.
ஆனால் மின்னணு வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணத் தொடங்கியதும், தவெக முன்னிலை பெறத் தொடங்கியுள்ளது. திராவிட கட்சிகளை பின்னுக்குத் தள்ளி, புதிதாக களம் கண்ட தவெக தமிழக அரசியல் களத்தையே புரட்டிப் போட்டுள்ளது.
தவெக தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான அளவு இடம் கிடைக்குமா என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.
TVK vs DMK என விஜய் தெரிவித்திருந்த நிலையில் தற்போது TVK vs ADMK என போட்டி கடுமையாக நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
தவெக தமிழக அரசியல் களத்தில் மற்றுமொரு சாதனையைப் படைத்துள்ளது. முதன்முறையாக போட்டியிட்ட தேர்தலிலேயே 1 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது தவெக. இதன்படி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
திமுகவும், அதிமுகவும் கடந்த 50 ஆண்டுகளில் மாறி மாறி ஆட்சி புரிந்த நிலையில், தற்போது தமிழகத்தின் அரசியல் களமே ஒரு புதிய முகத்தை தேடி நகர்ந்துள்ளது என்றே இந்த தேர்தல் முன்னணி நிலவரம் காட்டுகிறது.
தவெக முன்னிலை வகித்து வரும் சூழலில், விஜய் வீட்டில் அவரது உறவினர்கள் இப்போதே கொண்டாட்டத்தில் ஈடுபடத் தொடங்கி விட்டனர்.
தற்போதைய நிலவரப்படி தமிழக வெற்றி கழகம் 104, திமுக கூட்டணி 73, அதிமுக 57 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி எந்த தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையின் போது திமுக கூட்டணி முன்னணி வகித்தது. ஆனால் அது நீண்ட நேரத்திற்கு நீடிக்கவில்லை. அடுத்த சில நிமிடங்களிலேயே தவெக கூட்டணி முன்னிலை வகிக்க தொடங்கிவிட்டது. இதன்படி தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. இதன்படி தற்போது ஒரு கோடி வாக்குகளை கடந்து தமிழக வெற்றிக் கழகம் முன்னணியில் நீடித்து வருகிறது.
அண்மை செய்தியாக கொளத்தூரில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின். அதே நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி தவெக 1,12,20,014 (22.8%) வாக்குகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. தவெக-வின் வாக்கு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தபடியாக திமுக 1,01,34,27 (20.8%), அதிமுக 87,72,783 (18%), நாதக 12,05,039 (2.5%) வாக்குகளைப் பெற்றுள்ளன.
தவெக-வின் இந்த மாபெரும் வெற்றியானது, தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.