#BREAKING: தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கும் விஜய்.! அடுத்தடுத்த பரப்புரை லிஸ்ட் ரெடி.!

TVK Vijay
TVK Vijay
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தீவிர தேர்தல் பிரச்சார பரப்புரையில் ஈடுபடப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த 25 நாட்களில் இரண்டு முறை மட்டுமே விஜய் பரப்புரை மேற்கண்ட நிலையில், தவெக பிரச்சாரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அடுத்து வரும் சில நாட்களில் மிகத் தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுக்க தவெக தலைமை முடிவெடுத்துள்ளது. இதன் அடிப்படையில் நாளை கடலூரில் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ள விஜய், அடுத்து சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

பரப்புரைக்கு முன்னதாகவே தேர்தல் ஆணையத்திடம் அனுமதி வாங்க வேண்டுமென தவெக தலைமை நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: இனி ஆண்டுக்கு 2 முறை மட்டுமே CA இறுதித் தேர்வு.! ICAS அதிரடி அறிவிப்பு.!
TVK Vijay

சென்னை மற்றும் திருச்சியில் மட்டுமே இதுவரை பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள விஜய், இன்று நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார். நாளை கடலூரில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக சிவகங்கையில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பேசவுள்ளார் விஜய்.

இன்னும் தேர்தலுக்கு சில தினங்களே உள்ள நிலையில், மண்டல வாரியாக பிரச்சாரத்தை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார். அவ்வகையில் இன்று நெல்லையில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தில் 22 வேட்பாளர்களையும் ஆதரித்து பேச உள்ளார்.

அடுத்ததாக தூத்துக்குடியில் ரோடு ஷோ நிகழ்ச்சியை கலந்து கொள்கிறார் விஜய்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: 10-ம் வகுப்பு ரிசலட் தேதி இதுதான்.! விடைத்தாள்களை திருத்த 6 நாட்கள் மட்டுமே.!
TVK Vijay
logo
Kalki Online
kalkionline.com