#BREAKING: பிரச்சாரத்தில் விதிமீறல்.! விஜய் மீது மீண்டும் ஒரு வழக்குப்பதிவு.!

TVK Vijay
TVK Vijay
Updated on

புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 9-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நாளை (ஏப்ரல் 7) மாலையுடன் முடிவடைகிறது.

கடந்த ஏப்ரல் 4-ம் தேதி சனிக்கிழமை அன்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், புதுச்சேரியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது தேர்தல் விதிகளை மீறியதற்காக, தற்போது விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் மீது புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று சென்னையில் மேற்கொள்ளப்பட இருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில், தவெக நிர்வாகிகள் மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது, தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: சென்னையில் வருமான வரித்துறை 10 இடங்களில் திடீர் சோதனை.!
TVK Vijay

போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதற்கும், உரிய அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொண்டதற்கும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், புதுச்சேரி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, முன்னரும் இதே போன்ற தேர்தல் விதிமீறல் புகார்கள் தொடர்பாக அவர் மீது வழக்குகளும், அபராதங்களும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எந்தவொரு பிரபலமாக இருந்தாலும், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
செல்லப்பிராணிகளை கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க இதைச் செய்யுங்கள்!
TVK Vijay
logo
Kalki Online
kalkionline.com