பெண்களே இது உங்களுக்காக..! இனி கடையில் ரீசார்ஜ் செய்யும்போது நம்பர் கொடுக்க தேவையில்லை..!

பிஎஸ்என்எல் கஸ்டர்மார்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஒரு சூப்பரான நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது.
BSNL Launches Kavach Number
BSNL Launches Kavach Number
Published on

வெளியில் சென்று கடைகளில் ரீசார்ஜ் செய்யும் போது மொபைல் நம்பரை கொடுப்பதால் தான் பிரைவசி அதிகமாக பாதிக்கப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு. அப்படி ரீசார்ஜ் செய்யும் போது கடைகளில் பெண்களின் மொபைல் நம்பரை கொடுக்கும் போது சில தொந்தரவுகள் ஏற்படலாம். அதாவது பெண்களின் மொபைல் நம்பருக்கு தெரியாத நம்பரில் இருந்து மிஸ்டு கால், ராங் நம்பர், பிரச்சனை என்பது போன்ற ஏகப்பட்ட விஷயங்கள் நடக்கலாம்.

இதுபோன்ற பிரச்சனைகளை கருத்தில் கொண்டு பிஎஸ்என்எல் சிம் கார்டு வைத்து இருக்கும் கஸ்டர்மார்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited - BSNL) ஒரு சூப்பரான நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதுவும் குறிப்பாக நாட்டில் உள்ள பெண்களுக்கு மிகவும் தேவைப்படும் ஒரு வசதியை அறிவித்து உள்ளது.

பிஎஸ்எஸ்எல் அறிவித்துள்ள புதிய வசதி - பிஎஸ்என்எல் கவாச் (BSNL Kavach) என்று அழைக்கப்படும் ஒரு தொழில்நுட்பமாகும். அதாவது பிஎஸ்என்எல் (BSNL) கவாச்சா (Kavach) அம்சம் என்பது பெண்கள் தங்கள் உண்மையான மொபைல் எண்ணை வெளிப்படுத்தாமல், 10 இலக்க மாற்று எண் (Kavach Number) மூலம் ரீசார்ஜ் செய்ய உதவும் பாதுகாப்பான சேவையாகும். இது சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம்தேதி பிஎஸ்எஸ்எல் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
BSNL 5ஜி சேவை எப்போது?
BSNL Launches Kavach Number

இந்த திட்டத்தின் கீழ் பெண் சந்தாதாரர்கள்1503 அல்லது 1800-180-1503 என்ற எண்ணுக்கு போன் செய்து 9 என்ற நம்பரை மட்டும் அழுத்தினால் போதும். உங்களுக்கு செயல்படுத்தப்பட்டதும், உங்களுக்கு SMS மூலம் 10 இலக்க கவாச் எண் (10 Digit Kavach Number)கிடைக்கும்.

இதன் பிறகு நீங்கள் எப்போது ரீசார்ஜ் செய்வதாக இருந்தாலும், அந்த 10 இலக்க கவாச் நம்பரை மட்டும் கடைகளில் கூறி, உங்களுடைய தனிப்பட்ட மொபைல் நம்பரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அதாவது உங்கள் உண்மையான எண்ணை யாருக்கும் தெரியப்படுத்தாமல் பாதுகாப்பாக ரீசார்ஜ் செய்யலாம். இதன்மூலம் கடைகளில் பெண்கள் தங்களுடைய மொபைல் நம்பரை பகிர வேண்டிய அவசியம் இல்லை. இது பெண்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பிஎஸ்என்எல் வழங்கிய ஒரு சிறப்பு வசதியாகும்.

இந்த சேவை தொடர்பான ஏதோனும் சந்தேகம் இருந்தால் அல்லது கூடுதல் தகவல்களுக்கு, அருகில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகலாம்.

கடந்த பல மாதங்களாகவே பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இதுபோன்ற சில புதுமையான தீர்வுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிஎஸ்என்எல் கவாச் வசதி ஆனது இதுவரை நுகர்வோருக்கு வழங்கப்பட்டதிலேயே மிகவும் சிறப்பான சேவை என்று அனைவரும் கூறுகின்றனர்.

ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் யாரும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு இது போன்ற சேவையை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்

* கவாச் எண் தற்காலிகமானது. இது பொதுவாக ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு (எ.கா., 24 மணிநேரம்) அல்லது ஒருமுறை பயன்படுத்தும் ரீசார்ஜுக்குப் பிறகு காலாவதியாகிவிடும். உங்கள் அடுத்த ரீசார்ஜுக்கு நீங்கள் புதிய ஒன்றை உருவாக்க வேண்டும்.

* இந்த எண்ணை அழைப்புகள் அல்லது உள்வரும் SMS களுக்குப் பயன்படுத்த முடியாது; இது ரீசார்ஜ் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

இதையும் படியுங்கள்:
உடனே விண்ணப்பீங்க..! ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் BSNL-யில் வேலை... மொத்தம் 120 காலிப்பணியிடங்கள்..!
BSNL Launches Kavach Number

* தற்போது, ​​இந்த அம்சம் முதன்மையாக பெண் சந்தாதாரர்களுக்கு அவர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை மேம்படுத்துவதற்காக சந்தைப்படுத்தப்பட்டு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com