

காப்பீடு (Insurance) என்பது எதிர்பாராத நிதி இழப்புகள், விபத்துக்கள், நோய் அல்லது உயிரிழப்பு ஏற்படும் போது, ஒரு காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து நிதிப் பாதுகாப்பைப் பெறும் ஒரு ஒப்பந்த ஏற்பாடாகும்.
தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் உடல்நலப்பிரச்சனைகளுக்காக மருத்துவமனைக்கு செல்லும் போது மருத்துவமனையில் பில்லை பார்க்கும் போது தான் உண்மையிலேயே ஹார்ட்அட்டாக் வருகிறது. அந்நிலையில் நம்மை காக்கும் ஒரே கவசம் என்றால் அது இன்சூரன்ஸ் தான். ஆனால் இன்று இருக்கும் சூழ்நிலையில் சாதாரண மற்றும் நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்கள் இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டவே பாதி சம்பளம் போய்விடும் என்ற அச்சத்தில் நிறைய பேர் இன்சூரன்ஸ் எடுக்கவே பயப்படுகின்றனர். சாமானிய மக்களின் இந்த கவலைகளுக்குகெல்லாம் வரும் 1-ம்தேதி வெளியாக உள்ள பட்ஜெட் முற்றுப்புள்ளி வைக்கப்போகிறது.
அந்த வகையில் பிப்ரவரி 1-ம்தேதி 2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். ஆண்டுதோறும் வரும் எதிர்பார்ப்பை போலவே இந்த வருடமும் எதற்கெல்லாம் விலக்கு இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே மக்களிடையே அதிகரித்து வருகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தமுறை இன்சூரன்ஸ் துறையில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வரஉள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடுத்தர மக்களின் பாக்கெட்டை பதம் பார்க்கும் பிரீமியம் குறையுமா அல்லது வரியில் ஏதாவது சலுகை கிடைக்குமா வரும் 2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம் வாங்க...
பொதுவாக பட்ஜெட் என்றாலே நாம் வருமான வரி, பெட்ரோல் போன்றவை தான் எவ்வளவு குறையும் என்று எதிர்பார்ப்போம். ஆனால் இந்தாண்டு (2006) பட்ஜெட்டில் இந்திய அரசாங்கம் இன்சூரன்ஸ் துறையை நோக்கி தனது பார்வையை திருப்பி உள்ளது.
தற்போதுள்ள உலக பொருளாதார நிலையில் ஒரு சாதாரண, நடுத்தர குடும்பத்திற்கு health insurance and life insurance எவ்வளவு முக்கியம் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது.
அதனால் இந்த முறை அறிவிப்புகளாக மட்டும் இல்லாமல் கட்டமைப்பையே மாற்றும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதில் ரொம்பவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் அதுதான் காப்பீட்டு பிரீமியம் நிதி (insurance premium financing). இதுகுறித்து கருத்து கூறிய, BimaPay நிறுவனத்தின் CEO ஹனுத் மேத்தா (Hanut Mehta), 2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்சூரன்ஸ் துறையோடு ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்றார். ஏனெனில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் ஒரு சாதாரண நடுத்தர குடும்பம் ஒரு வருடத்திற்கு ரூ.30000 பிரீமியம் கட்ட வேண்டும் என்றால் அது அவர்களுக்கு ஒரு பெரிய சுமையாக உள்ளது.
ஆனால் அரசாங்கம் இப்போது இந்த பிரீமியம் தொகையை சுலபமாக தவணை முறையில் கட்டும் வகையில் அதாவது EMI-ல் கட்டுவதற்கு ஏதாவது வழிவகை செய்ய உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இதனால் கையில் மொத்தமாக பணம் இல்லையென்றாலும் நீங்க உங்க குடும்பத்திற்கு ஒரு நல்ல இன்சுரன்ஸ் பாலிசியை எடுக்க முடியும்.
அடுத்ததாக நாம் அனைவரும் எதிர்பாக்கும் வரிசலுகை. இப்போது நாம் கட்டும் இன்சூரன்ஸ் பிரீமியத்திற்கு 80C அல்லது 80D பிரிவில் வரி விலக்கு கிடைக்கிறது.அதனால் புது வரி திட்டத்தில் இருப்பவர்களும், இன்சூரன்ஸ் எடுப்பதை ஊக்கப்படுத்த ஒரு சிறப்பு விலக்கு(special deduction)கொண்டு வரவும் வாய்ப்புள்ளது.
அப்படி வரும் பட்சத்தில் நீங்கள் இன்சூரன்ஸ் எடுப்பது மூலமாக நீங்க வரியை இன்னும் அதிகமாக மிச்சப்படுத்த முடியும். இது நடக்கும் பட்சத்தில் அதிக மதிப்புள்ள பாலிசிகளை மக்கள் தைரியமாக எடுக்கமுடியும் என்பதுடன் இது உங்களுடைய குடும்பத்திற்கு பெரிய பாதுகாப்பையும் தரும் என்பதை மறுக்க முடியாது.
மற்றொரு புறம் சிறு,குறு தொழில் நடத்துபவர்களுக்கும் ஒரு நல்ல செய்தி உள்ளது. இந்தியாவில் உள்ள சின்ன தொழில்செய்பவர்களுக்கு தீ விபத்தோ, இயற்கை சீற்றமோ வந்தால் அவர்களுடைய தொழிலை பாதுகாக்கும் அளவிற்கு இன்சூரன்ஸ் இல்லை. இதனால் சிறு தொழில் நிறுவனங்களுக்கு மிகக்குறைந்த விலையில் இன்சூரன்ஸ் கிடைப்பதற்கான ஒரு புதிய பாலிசியை இந்த பட்ஜெட்டில் நாம் எதிர்பார்க்கலாம்.
இன்றைக்கு இருக்கும் டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே வேகமாக இருக்கு, ஆனா இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் என்றால் இன்றைக்கும் அந்த பழைய KYC process, document என்று இழுத்தடிக்கிறார்கள். இதை சரிசெய்ய அரசாங்கம் ஒரு டிஜிட்டல் மறு வடிவம் கொண்டு வரஉள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது வங்கியின் டேட்டாவை ஈஸியாக share செய்வதன் மூலமாக ஒரு நிமிடத்தில் உங்களுடைய KYC முடித்து பாலிசியை கொடுக்கும் வகையில் சிஸ்டத்தில் மாற்றம் கொண்டு வரப்போகிறார்கள்.
இதனால் லோன் எடுப்பது எப்படி சுலபமாக மாறியதோ அதுபோலவே இன்சூரன்ஸ் பிரீமியத்திற்கு நிதி வாங்குவதும் மிகவும் சுலபமாக மாறும்.
மற்றொரு முக்கிய அம்சமாக, வயதான காலத்தில் யாரையும் நம்பி இருக்கக்கூடாது என்ற நினைப்பவர்களுக்கு பென்ஷன் மற்றும் வருடாந்திர திட்டங்களில் இருக்கும் வரி குறைக்கவோ அல்லது அதில் வரும் லாபத்திற்கு வரி விலக்கு கொடுக்கவோ அரசாங்கம் திட்டம் போட்டுள்ளது.
2026-ல் இந்தியாவின் மக்கள்தொகையில் முதியவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகப்போகிறது. அவர்கள் யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது என்பது தான் மோடி அரசாங்கத்தின் உடைய முக்கியமான லட்சியம்.
2026 பட்ஜெட் என்பது வெறும் எண்கள் விளையாட்டு அல்ல. இது உங்களுடைய ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான ஒரு blue print. இன்சூரன்ஸ் பிரீமியம் பைனான்சிங் மூலமாக சாதாரண மக்களும் பெரிய பாலிசிகளை எடுக்க முடியும் என்ற நிலைமை வந்து விட்டால் அது இந்தியாவின் உடைய சுகாதார அமைப்பையே (health care system ) மாற்றி அமைத்து விடும். இதன் மூலம் மருத்துவமனை செலவுக்காக உங்களுடைய சேமிப்பை கரைக்க வேண்டிய அவசியம் இருக்காது.
பட்ஜெட்டில் என்னவெல்லாம் மாற்றங்கள் வரப்போகிறது என்று பார்ப்பதற்கு முன் உங்கள் குடும்பத்திற்கு ஒரு அடிப்படை இன்சூரன்ஸ் இருக்கிறதா என்று பாருங்கள். ஏனெனில் விபத்தோ, உடல்பாதிப்புகளோ சொல்லிக்கொண்டு வராது. இந்த பட்ஜெட்டில் வரும் சலுகைகளை வைத்து உங்களுடைய பாலிசியை இன்னும் கொஞ்சம் அப்டேட் செய்துக்கொள்ளுங்கள்.
அந்த வகையில் சாதாரண நடுத்தர மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் 2026 பட்ஜெட்டில் இன்சூரன்ஸ் பிரீமியம் நிஜமாகவே குறையுமா அல்லது வரியில் சலுகைகள் மட்டும் கிடைக்குமா என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்.