#BREAKING : இன்று முதல் விருப்பமனு விநியோகம்…. எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு….!!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக பொதுச்செயலர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
EPS ADMK |விருப்பமனு
EPS|விருப்பமனு
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ம்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அக்டோபர் 9-ம்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த தொகுதிகளில் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட அதிமுக சார்பில் இன்று முதல் செப்டம்பர் 10-ம்தேதி வரை விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக எல்எல்ஏக்கள் ராஜினாமாவால் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அக்டோபர் 6-ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

நாளை முதல் இரண்டு தொகுதிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் இன்று முதல் விருப்ப மனு பெற உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.

இன்று முதல் மூன்று நாட்களுக்கு விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக பொதுச்செயலர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

இன்று முதல் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதற்கான படிவத்தை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து வரும் செப்டம்பர் 10-ம்தேதி மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING : தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு ..!!
EPS ADMK |விருப்பமனு

இரண்டு தொகுகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட போகும் வேட்பாளர்கள் யார் என்பதை தேர்வு செய்யும் பொருட்டு இந்த விருப்பமனு விநியோகம் குறித்த அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முறைப்படி அறிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com