#BREAKING: இடைத்தேர்தலில் வெல்ல அதிரடி முடிவு.! தேர்தல் பணிக்குழுவில் எத்தனை அமைச்சர்கள் தெரியுமா.?

தவெக வேட்பாளர்கள்
By Election
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தமிழ்நாட்டில் வருகின்ற 6-ம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான வேட்பாளர்களை திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய மூன்று கட்சிகள் ஏற்கனவே அறிவித்து விட்டன. நாம் தமிழர் கட்சி மட்டும் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்நிலையில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் பணி குழுவையும், தேர்தல் பொறுப்பாளர்களையும் நியமித்தது தமிழக வெற்றிக் கழகம்.

இதன் படி இடைத்தேர்தல் பொறுப்புகளை கவனித்துக் கொள்ள மூன்று அமைச்சர்களைக் கொண்ட தேர்தல் கண்காளிப்பாளர்களை அமைத்துள்ளது தமிழக வெற்றிக் கழகம். இந்த கண்காளிப்பாளர் குழுவில் அமைச்சர் என்.ஆனந்த், அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அமைச்சர் நிர்மல் குமார் ஆகிய மூவர் இடம் பெற்றுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.! இன்றைய விலை நிலவரம் இதோ.!
தவெக வேட்பாளர்கள்

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு பணிக்குழு பொறுப்பாளராக அமைச்சர் ஆதம் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இணை பொறுப்பாளர்களாக அமைச்சர் தென்னரசு, அமைச்சர் ராஜ்குமார் மற்றும் அமைச்சர் வினோத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

துணைப் பொறுப்பாளர்களாக சரவணமூர்த்தி, தியாகராஜன், விஜயராஜ் மற்றும் காமாட்சி ஆகிய 4 எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளர் பாலாஜி என்கிற மணிகண்டனும் துணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்.!! காவல் துறையில் 30,000+ காலிப் பணியிடங்கள்.! விரைவில் வரப்போகும் மெகா அறிவிப்பு.!
தவெக வேட்பாளர்கள்

தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு அமைச்சர் அருண்குமார் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளர்களாக அமைச்சர் விஜய் பாலாஜி, அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், அமைச்சர் விஜயலட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

துணைப் பொறுப்பாளர்களாக பாலமுருகன், சத்யபாமா, ராம்குமார், திலீப் மற்றும் சத்யா ஆகிய 5 எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றி கழகம் நியமித்துள்ள தேர்தல் பணி குழு மற்றும் கண்காணிப்பாளர்களின் மொத்தம் 11 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கரகம் வெற்றி பெற சட்டமன்ற உறுப்பினர்கள் அயராது தஙகள் கடமையை செய்ய வேண்டும் எனவும் தவெக கோரிக்கை விடுத்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com