

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக மற்றும் அமமுக ஆதரவு அளித்துள்ள நிலையில், பாமகவின் ஆதரவையும் நாடியுள்ளார் பொதுச்செயலாளர் இபிஎஸ்.
அதே சமயம் திமுகவின் கூட்டணி கட்சிகள் தற்போது தவெக-வுடன் கூட்டணி சேர்ந்துள்ளதால், அவர்களின் தேமுதிகவின் ஆதரவை மட்டும் நாடியது திமுக. மேலும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் இதுவரை திமுக ஆதரவு கேட்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக-விற்கு ஆதரவளிக்குமா அல்லது திமுகவிற்கு ஆதரவளிக்குமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் நிலவி வந்தது. இதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கூடியது. தங்களது முடிவை நாளை மதியம் 2 மணிக்கு அறிவிப்போம் என சண்முகம் தெரிவித்துள்ளார்.
மாநில செயற்குழு கூட்டத்திற்கு முன்பாக மூன்று விதமான முடிவுகளில் ஏதேனும் ஒன்றை எடுக்க கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதன்படி திமுகவிற்கு ஆதரவளிப்பது, தவெக-விற்கு ஆதரவளிப்பது மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரின் நிறுத்துவது ஆகிய 3-ல் 1 முடிவை நிர்வாகிகள் கலந்தாலோசித்து எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப மாநில செயற்குழு கூட்டத்தில் பெரும்பான்மையான கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தவெகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என வலியுறுத்தினர்.
தவெக வேட்பாளர் தேர்வில் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் அதிருப்தியாக உள்ளனர். இந்நிலையில் இடைத்தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பதை விரைவில் அறிவிப்போம் என சிபிஐ செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதே நிலைப்பாட்டில் தான் சிபிஎம் கட்சியும் உள்ளது.
கடந்த 2 நாட்களக்கு முன்பு தாங்கள் யாருடைய கூட்டணியிலும் இல்லை நாங்கள் தமிழக அரசின் அமைச்சரவையிலும் இல்லை என சிபிஎம் முன்னாள் மாநில செயலர் தெரிவித்தார். அதோடு கடந்த செப்டம்பர் 9-ம் தேதி தவெக சார்பில் கூட்டணி கட்சிகள் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தவெக அரசு அமைய கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து அளித்த ஆதரவு தொடரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை செயற்குழு கூட்டத்தில் தான் அறிவிப்போம் என கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்திருந்த நிலையில், சற்று முன் முக்கிய முடிவை வெளியிட்டார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பெ.சண்முகம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து கலந்தாலோசிக்க மாநில செயற்குழு கூட்டத்தை கூட்டிய அதேசமயம், சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டக்கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியதால், வீடியோ கான்பரன்ஸிங் மூலம் சிபிஐ கூட்டம் நடைபெற்று முடிந்தது.