

நீங்கள் கனரா வங்கி (Canara Bank) வாடிக்கையாளராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்குத்தான். கனரா வங்கி தனது ஏடிஎம் (ATM) பரிவர்த்தனை கட்டணங்களை மாற்றியமைத்துள்ளது. இந்த மாற்றங்களில், சாதாரண சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான இலவச பரிவர்த்தனை வரம்பைக் குறைப்பதும், இலவச வரம்பிற்கு அப்பால் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதும் அடங்கும்.
சாதாரண சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் கனரா வங்கியின் சொந்த ஏடிஎம்களில் ஒரு மாதத்தில் 6 முறை இலவச பரிவர்த்தனை (transaction)செய்யலாம் என்று இருந்தது. இந்த வரம்பு நிதி (Financial Transactions) மற்றும் நிதி சாராத பரிவர்த்தனைகள் (Non-Financial Transactions) ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.
நிதிசார் பரிவர்த்தனைகள் என்பது ஏடிஎம் கார்ட்டை போட்டு பணத்தை எடுப்பது. நிதிசாரா பரிவர்த்தனைகள் என்பது ஏடிஎம்முக்கு போய் எவ்வளவு balance இருக்கிறது என்பதை சரிபார்த்து mini statement எடுத்துக்கொள்வது.
கனரா வங்கியில் (Canara Bank) வழக்கமான சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு (இரண்டு பரிவர்த்தனைகள்), தங்களது சொந்த வங்கி ஏடிஎம்களில் வழங்கப்பட்டு வந்த 6 இலவச பரிவர்த்தனைகள் (Transactions) தற்போது 5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இலவச வரம்பு முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் அடுத்தடுத்த பரிவர்த்தனைகளுக்கு இனிமேல் உரிய கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும். இந்த புதிய ஏடிஎம் விதிமுறைகள் மற்றும் கட்டண மாற்றங்கள் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளன.
ஆனால் மூத்த குடிமக்களுக்கு (Senior Citizens) இலவச வரம்பில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம்போல அவர்கள் மாதத்திற்கு 8 முறை இலவசமாகப் பயன்படுத்தலாம்.
இலவசப் பரிவர்த்தனையை (free transaction) தாண்டி கூடுதலாக பரிவர்த்தனை செய்வதாக இருந்தால் இதுவரைக்கும் கூடுதலான பரிவர்த்தனைக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை கனரா வங்கி வசூலித்தது. ஆனால் அந்த கட்டணத்தையும் தற்போது கனரா வங்கி உயர்த்தி உள்ளது.
உதாரணமாக நிதிசார் பரிவர்த்தனைகளுக்கு கனரா வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தல் (ICCW அல்லது UPI மூலம் பணம் எடுத்தல் உட்பட) ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.20 + GST வசூலிக்கப்பட்ட நிலையில் இனிமேல் 23 ரூபாய் + ஜிஎஸ்டி (GST) என உயர்த்தப்பட்டுள்ளது.
அதுவே இருப்புத் தொகையைச் சரிபார்த்தல் அல்லது பணம் சாராத பிற சேவைகள் போன்ற இலவச வரம்பிற்கு அப்பாற்பட்ட நிதி சாராத பரிவர்த்தனைகளுக்கான (Non-Financial) கட்டணம் ரூ. 5 மற்றும் ஜிஎஸ்டி என்ற அளவிலேயே தொடர்கிறது (இதில் மாற்றமில்லை).
இலவச பரிவர்த்தனை வரம்பைக் கடந்த பிறகு, வாடிக்கையாளரின் கணக்கில் போதுமான பணம் இல்லாமல் ஏடிஎம் பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்போது விதிக்கப்படும் கட்டணத்தையும் கனரா வங்கி உயர்த்தியுள்ளது.
உதாரணமாக நீங்க ஏடிஎம்முக்கு போய் ஏடிஎம் கார்ட்டை போட்டு பின் நம்பரை போட்டு பணத்தை எடுக்கலாம் எனும் போது, அதாவது உங்கள் கணக்கில் போதிய பணம் இல்லாதபோது ஏடிஎம்மில் பணம் எடுக்க முயன்று அது தோல்வியடைந்தால் (Insufficient Funds), அதற்கான அபராதக் கட்டணம் 17 ரூபாய் + ஜிஎஸ்டியை கனரா வங்கி வசூலித்தது. ஆனால் தற்போது 23 ரூபாய் + ஜிஎஸ்டி ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வங்கியின் புதுப்பிக்கப்பட்ட சேவை கட்டணப் பட்டியலின்படி, இந்தக் கட்டண உயர்வு கனரா வங்கி ஏடிஎம்கள் மற்றும் பிற வங்கி ஏடிஎம்கள் ஆகிய இரண்டிலும் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற வங்கிகளின் ஏடிஎம்களைப் பயன்படுத்தும் கனரா வங்கி டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, இலவச பரிவர்த்தனை வரம்பு என்பது அந்த இடத்தைப் பொறுத்தே அமைகிறது. பெருநகரப் பகுதிகளில் உள்ள பிற வங்கி ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு மூன்று இலவச பரிவர்த்தனைகளையும், பெருநகரம் அல்லாத பகுதிகளில் ஐந்து இலவச பரிவர்த்தனைகளையும் பெறலாம்.
இலவச பரிவர்த்தனை வரம்பிற்கு அப்பால் 'கிரீன் பின்' (Green PIN) எனப்படும் ஏடிஎம் பின் (PIN) குறியீட்டை மீண்டும் உருவாக்குவதற்கான கட்டணத்தை ரூ. 23 மற்றும் ஜிஎஸ்டி என்பதிலிருந்து ரூ. 5 மற்றும் ஜிஎஸ்டி ஆகவும் வங்கி குறைத்துள்ளது.
எனவே, கனரா வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மற்றும் கேஷ் ரீசைக்கிளர் (Cash Recycler) இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது இந்த புதிய வரம்புகளையும் கட்டணங்களையும் கவனத்தில் கொள்வது நல்லது.
உங்கள் நண்பர்கள் யாராவது கனரா வங்கியில் கணக்கு வைத்திருந்தால் இந்த விஷயத்தை உடனே ஷேர் பண்ணுங்க.