மக்களே உஷார்: KYC லிங்க்கை கிளிக் செய்யாதீங்க... ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..!!!

சமீபகாலமாகப் புதிய முறையில் மோசடிகள் அரங்கேறி வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
வங்கி மோசடி
வங்கி மோசடிAI Image
Updated on

வங்கி கணக்கின் கேஒய்சி (வாடிக்கையாளரின் அடையாளம் அறிதல் - KYC) விவரங்களை உடனடியாகப் புதுப்பிக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும் எனக் கூறி வரும் குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ் அப் தகவல்களை (வங்கி மோசடி) நம்ப வேண்டாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய தகவல்கள் மூலம் நடைபெறும் மோசடிகள் குறித்து வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய உயர் தொழில்நுட்ப யுகத்தில், இன்டர்நெட்டின் பயன்பாடு அபரிமிதமாக வளர்ந்து வருகிறது. இருப்பினும், ஆன்லைன் வங்கியின் வருகையுடன், ஹேக்கர்களும் தங்களை மேம்படுத்திக் கொண்டு பண மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனால் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ளன.

இந்தியாவில் நாளுக்கு நாள் மோசடி அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தெரியாத எண்களிலிருந்து வரும் வாட்ஸ்ஆப் அழைப்புகளுக்குப் பதிலளிக்கவோ, இந்த எண்களுக்கு, எந்த தனிப்பட்ட விவரங்களை பகிரவோ வேண்டாம் என சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற அனைத்து மோசடிகளையும் தடுக்க எப்போதும் நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

சமீபகாலமாகப் புதிய முறையில் மோசடிகள் அரங்கேறி வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. 'வங்கிக் கணக்கின் கே.ஒய்.சி (KYC) விவரங்களை உடனடியாகப் புதுப்பிக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும்' எனக் கூறி வரும் குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

மோசடி நபர்கள் வங்கி அதிகாரிகளைப் போல காட்டிக் கொண்டு வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களின் கேஒய்சி விவரங்களை உடனடியாகப் புதுப்பிக்க வேண்டும் என மிரட்டும் மோசடிப் புகார்கள் அதிகரித்து வருவதால் இந்த எச்சரிக்கை செய்தி தற்போது வாட்ஸ்அப் மூலம் அனைத்து பயனர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ஒருவேளை, உங்களுடைய வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று அச்சுறுத்தும் குறுஞ்செய்திகள் வந்தால் பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

இது போன்ற குறுஞ்செய்திகள் வேண்டுமென்றே அச்சத்தை ஏற்படுத்தவும், அவசரமாகச் செயல்படத் தூண்டவும் உருவாக்கப்படுகின்றன.

மேலும் இதுபோன்ற குறுஞ்செய்திகளால் அச்சமடையும் வங்கி வாடிக்கையாளர்களை, அவசரமாக நடவடிக்கை எடுக்க வைப்பதன் மூலம் அவர்களின் பணத்தை திருடுவது இணையவழி மோசடியாளர்களின் புதிய உத்தியாக உள்ளது. மோசடிக்காரர்கள் அனுப்பும் குறுஞ்செய்தி இணைப்பை கிளிக் செய்தவுடன் உங்களது தனிப்பட்ட மற்றும் வங்கி சார்ந்த தகவல்களை திருடும் முயற்சிகள் ஈடுபடுகின்றனர்.

இதுபோன்ற மோசடி முயற்சிகளில் சிக்காமல் இருக்க ‘நில், யோசி, செயல்படு’ என்ற 3 முக்கிய விதிகளைப் பின்பற்றுமாறு RBI அறிவுறுத்தியுள்ளது.

முதலில், சந்தேகத்துக்குரிய குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் அப் தகவல் வந்தவுடன் பதற்றமடையாமல், அந்தத் தகவலின் உண்மைத் தன்மையை சரிபார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மிரட்ட கூடாது... அவமானப்படுத்த கூடாது! வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு..!
வங்கி மோசடி

அடுத்து, வங்கிகள் அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்கள் கேஒய்சி புதுப்பிப்புக்காக குறுஞ்செய்தி வாயிலாக சந்தேகத்துக்குரிய இணைய இணைப்புகளை அனுப்புவதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது சந்தேகத்துக்குரிய எண்களில் இருந்து வரும் இணைய இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்யக்கூடாது.

அதுமட்டுமின்றி ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP), வங்கி பரிவர்த்தனை ரகசிய குறியீடு (PIN), Password உள்ளிட்ட முக்கியமான தகவல்களை முன், பின் தெரியாத யாரிடமும் பகிரக்கூடாது என RBI அறிவுறுத்தியுள்ளது.

வங்கி மற்றும் கார்டு விவரங்களைப் பெற மோசடி செய்பவர்கள் கேஒய்சி அப்டேட்டை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். இதுபோல் தான் குருகிராமில் ஒரு நபர், ஆக்சிஸ் வங்கி அதிகாரி போல் பேசிய ஒருவரின் பேச்சைக் கேட்டு கேஒய்சி முழுமையடையவில்லை என்று அவர் கூறியதை நம்பி, அவர் அனுப்பிய இணைப்பைக் கிளிக் செய்தவுடன் அந்த நபரின் கணக்கிலிருந்து ரூ. 1.28 லட்சம் திருடப்பட்டுள்ளது.

கேஒய்சி கோரிக்கை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் குறுஞ்செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்ணை அணுகுவதற்கு பதிலாக, சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம், செயலி அல்லது வாடிக்கையாளர் சேவை எண் மூலம் நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கடைசி 2 நாள்..! உடனே இதை செஞ்சிடுங்க இல்லாட்டி வீட்டுக்கு கேஸ் வராது..!
வங்கி மோசடி

சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகளில் வரும் இணைப்புகளையோ அல்லது தொலைபேசி எண்களையோ ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம் என்று வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com