

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்து வந்த 50 ஓடிடி (OTT) தளங்களுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. ஆபாசமான கண்டென்ட், சட்டவிரோத உள்ளடக்கம் மற்றும் கண்ணியமற்ற சித்தரிப்பு , அசிங்கமான உள்ளடக்கத்தைக் காட்டுதல் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act), பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் பெண்களை ஆபாசமாகச் சித்தரிப்பதைத் தடை செய்யும் சட்டம் (1986) உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை மீறியதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறையின் இணையமைச்சர் எல் முருகன் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ளூர் திரைப்படங்கள், வெப் சீரிஸ் மற்றும் பிராந்திய மொழிகளுக்குக் கிடைக்கும் வரவேற்பால் தற்போது ஓடிடி (OTT) தளங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற முன்னணி தளங்கள் இந்திய சந்தையில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்கின்றன. சுமார் 97% பயனர்கள் தங்கள் மொபைல் போன்களிலேயே ஸ்ட்ரீமிங் செய்கின்றனர், அதே நேரத்தில் 7 கோடிக்கும் அதிகமானோர் பெரிய திரைகளில் (Smart TVs) பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.
OTT தடை :
இதில் பல ஓடிடி தளங்களில் ஆபாசமான கண்டெண்ட் இருப்பதோடு, நம் நாட்டில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறும் வகையிலும் உள்ளன. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு பல்வேறு புகார்கள் சென்ற நிலையில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் விதிமீறிய ஓடிடி தளங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
மக்களவையில் ராஜாபாவு பராக் பிரகாஷ் வாஜே எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறைக்கான இணையமைச்சர் எல்.முருகன் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
அதில், முடக்கப்பட்ட சேவைகள் அசிங்கமான உள்ளடக்கத்தைக் காட்டுவதாகவும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 மற்றும் 67A, பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 294 மற்றும் பெண்களை ஆபாசமாகச் சித்தரிப்பதைத் தடை செய்யும் சட்டத்தின் (1986) பிரிவு 4 ஆகியவற்றை மீறுவதாகவும் கண்டறியப்பட்டது.
டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் OTT தளங்களுக்கு எதிரான புகார்கள், தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள்) விதிகள், 2021-ன் கீழ் கையாளப்படுகின்றன மத்திய அமைச்சர் முருகன் கூறினார்.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act, 2000) கீழ் பிப்ரவரி 25, 2021 அன்று அறிவிக்கப்பட்ட விதிகள், டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் ஓடிடி (OTT) போன்ற ஆன்லைன் தளங்களை கட்டுப்படுத்துவதற்கான ஒரு ஒழுங்குமுறை விதியை உருவாக்கின.
தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விதிமீறும் ஓடிடி தளங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதனை தொடர்ந்து ஆபாசமான அல்லது ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களை வெளியிடுவதைத் தடுக்கும் பொருட்டு, தகவல் தொழில்நுட்ப சட்டங்களின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. ஓடிடி தளங்களை முடக்கியதுடன் மட்டுமின்றி, திரைப்படங்கள் மற்றும் வலைத்தொடர்களை சட்டவிரோதமாகப் பகிர்ந்த 3,100-க்கும் மேற்பட்ட டெலிகிராம் (Telegram) சேனல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆபாசமான கண்டெண்ட், தகவல் தொழில்நுட்ப சட்டம், பிஎன்எஸ் சட்டம், பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதை தடை செய்யும் சட்டம் 1986 உள்பட நம் நாட்டின் விதிகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், சட்டத்தை மீறுவதாகக் கண்டறியப்படும் இடைத்தரகர்கள் (intermediaries) மற்றும் OTT தளங்களுக்கு எதிராக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மத்திய அமைச்சர் முருகன் கூறினார்.