மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: கேட்கப்படும் 40 கேள்விகள் என்ன? முன்கூட்டியே அறிந்து கொள்ளுங்கள்!

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் 40 கேள்விகள், சாதி விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்த முழுமையான வழிகாட்டி.
census 2027
census AI
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

நாடு முழுக்க தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒவ்வொரு பகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2027 பிப்ரவரி மாதம் நாடு முழுக்க இரண்டாவது கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் சாதி வாரியாக மக்கள் தொகை குறிப்பிடப்படும். மேலும் இந்த கணக்கெடுப்பில் 40 கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட உள்ளன.இந்தப் பணியில் நாடு முழுவதும் அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த கேள்விகளில் தனிநபர், குடும்பம், கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை விவரங்கள் கேள்விகளாக கேட்கப்பட உள்ளன. அதனால் அதற்கு தகுந்தார் போல் பொதுமக்கள் தங்களை முன்கூட்டியே தயார் படுத்திக் கொள்வது தேவையற்ற நேர விரயங்களை தவிர்க்கும். அவர்களால் கேட்கப்படும் கேள்விகளை கூர்ந்து கவனித்து சரியான பதில்களை கொடுக்கவும்.

முதலில் ஒரு குடும்பத்தின் தனிநபர் பற்றிய விவரங்கள் கேட்கப்படும். அவை பின்வருமாறு.

தனிநபர் பற்றிய விவரங்கள்

1.தனி ​நபரின் பெயர்

2. பாலினம்

3. வயது மற்றும் பிறந்த தேதி

4. குடும்பத் ​தலைவருடனான உறவு

5. திருமணம் ஆகி விட்டதா?

​6. திருமணம் ஆகி எத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளது?

​7. ​கணவர்/மனைவி பெயர்

8.​தேசியம்

9.​மதம்

10. ​SC / ST / சாதி

அதை தொடர்ந்து அவரது குடும்பம் மற்றும் கல்வி , வேலைவாய்ப்புகளைப் பற்றிய விவரங்கள் கேட்கப்படும்.

 குடும்பம் / கல்வி / வேலை

1.​தந்தை பெயர்

2 ​தாய் பெயர்

3. ​ மாற்றுத் திறனாளியா?

4. தாய் மொழி & அறிந்த மொழிகள்

5.​ ​கல்வியறிவு , டிஜிட்டல் கல்வியறிவு

6. ​கல்வி நிலை

7. ​கல்வித்தகுதி மற்றும் அதில் தேர்ந்தெடுத்த முக்கிய பாடப்பிரிவு

8. ​ வேலை

9. தொழில்கள் ஏதேனும் செய்கிறாரா?

10. ​ஆண்டு வருமானம்

census
census Ai

வேலை/தொழில்/ இடம்பெயர்வு பற்றிய தகவல்கள்

1. தொழில்/ வர்த்தகம்/ சேவை

2. ​பணியாளர் வகை

3.​பொருளாதாரமற்ற செயல்பாடு

4.​வேலை தேடுபவரா? /தயாராக உள்ளதா ?

5.​ பணி சார்ந்த பயணம்

6. ​பிறந்த ஊர்

7. ​கடைசி வசிப்பிடம்

8.​ இடம்பெயர்வுக்கான காரணம்

9 . ​வசிக்கும் காலம்

10.​நிரந்தர முகவரி

குழந்தைகள் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள்

1.​உயிருடன் இருக்கும் குழந்தைகள்

2.​இதுவரை பிறந்த குழந்தைகள்

3.​கடந்த வருடம் பிறந்த குழந்தைகள்

4. ​கோவிட்-19 தடுப்பூசி போட்ட இடம்

5.​வங்கிக் கணக்குகள்

6.​மொபைல் எண் (இருந்தால்)

7. ​ஆதார் எண் (இருந்தால்)

8.​வாக்காளர் அடையாள அட்டை

9. ​பாஸ்போர்ட் எண் ( இருந்தால்)

10. ​ஓட்டுநர் உரிமம் (இருந்தால்)

(மத்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் ஏதேனும் ஒன்று இருந்தால் போதுமானது)

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதி குறித்த விவரங்கள் கேட்கப்படும். ஆனால் SC/ST சமூகம் சேராதவர்களை பொதுப்பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் (Gen/OBC) பிரிக்கும் நடைமுறை இருக்காது. அவர்கள் தங்களின் சாதிப் பெயரை கூறினாலே போதுமானது. ​OBC-க்கு என்று தனித் தேர்வு பட்டியல் இதில் இடம்பெறாது.

குறிப்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிற்படுத்தப்பட்ட சமுதாய பட்டியல்களில் (OBC) ஒன்றுக்கொன்று மறுபடிகளை கொண்டுள்ளது. அதனால், அவர்களை எந்த அரசின் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்வது என்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதன் காரணமாக எடுக்கப்படும் தரவுகளில் குழப்பங்கள் நேரிடலாம் என்பதால் , இந்த கணக்கெடுப்பில் சாதிப் பெயரை மட்டும் கூறினால் போது மானது என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஹோட்டல் சுவையில் உப்பலான பூரி செய்ய இந்த 1 பொருள் போதும்!
census 2027
logo
Kalki Online
kalkionline.com