ஹோட்டல் சுவையில் உப்பலான பூரி செய்ய இந்த 1 பொருள் போதும்!

மாவு பிசையும்போது பாலும், தயிரும் சேர்த்தால் கிடைக்கும் மாயாஜால சுவையை நீங்களும் தெரிஞ்சுக்கோங்க.
மென்மையான பூரி - Soft Poori Recipe
மென்மையான பூரி - Soft Poori Recipe
Updated on

ப்பொழுதும் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை டிபன் என்ன செய்ய? உங்களுக்கு எது மிகவும் பிடிக்கும்? என்று கேட்டால் பட்டென்று பூரிக்கிழங்கு என்று சொல்பவர்களே அதிகம்.

பூரி செய்ய கற்றுக்கொண்ட ஆரம்பத்தில் பூரி சுட்டு வைத்தால் சட்டென்று அமுங்கி போய்விடும். உப்பலாக இருக்காது. அதற்கான காரணங்களும் அப்பொழுது தெரியாது. ஆனால் மெல்ல மெல்ல ஒவ்வொரு பொருளாக சேர்த்து பிசைந்துகொண்டு செய்யும் பொழுது பூரி உப்பலாக ஊதிப்போய் வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததை அறியமுடிந்தது.

அப்படி பூரி சுட்டு வைத்தால் சில நிமிடங்களிலேயே அமுங்கிப்போகாமல், கடைகளில் கிடைப்பது போல் நல்ல உப்பலாகவும் (Puffy), நீண்ட நேரம் மொறுமொறுப்பான மென்மையோடும் இருக்க மாவு பிசையும்போது சேர்க்க வேண்டிய அந்த ஒரே ரகசியப்பொருள் என்ன? அதை எப்படி சேர்த்து மென்மையான பூரிகளாகத் திரட்ட வேண்டும். மேலும் அந்த ஊதலான பூரி செய்வதற்கான அசத்தலான டிப்ஸ் அனைத்தையும் இப்பகுதியில் காண்போம்.

பூரி ஊதிப்போய் வருவதற்கானஅந்த ரகசியப் பொருள்:

​ரவா (ரவை - Rava / Sooji) இந்த ரவை தான் பூரி ஊதி வருவதற்கான ரகசியப் பொருள். அதை வைத்து எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பூரி செய்ய தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு- ஒரு கப்

ரவை 1.5 மேஜை கரண்டி

சூடான எண்ணெய் அல்லது நெய்- ஒரு தேக்கரண்டி

உப்பு -சிறிதளவு

வெதுவெதுப்பான நீர் -தேவையான அளவு

எண்ணெய் பொரிக்க- தேவையான அளவு

மென்மையான பூரி - Soft Poori Recipe
மென்மையான பூரி - Soft Poori RecipeAI Image

செய்முறை:

​இப்போது ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்ட கோதுமை மாவுடன் ரவை, தேவையான அளவு உப்பு மற்றும் 1 தேக்கரண்டி சூடான எண்ணெய் (அல்லது நெய்) சேர்த்து முதலில் கைகளால் நன்றாகக் கலந்து கொள்ளவும்.பிறகு, மிதமான வெதுவெதுப்பான நீர் தெளித்து மாவைப் பிசையவேண்டும்.

அப்படி பிசையும்போது சப்பாத்தி மாவிற்குப் பிசைவது போல தளர்வாகப் பிசையக் கூடாது. பூரி மாவு சற்று கெட்டியாக (Tight dough) இருக்கவேண்டும். அப்படி மாவை கெட்டியாக பிசைந்ததும் ஊறவைக்க வேண்டிய அவசியமில்லை; பூரிக்கட்டையில் சிறிது எண்ணெயை தேய்த்துக்கொண்டு சின்ன சின்ன உருண்டைகளாக மாவை உருட்டி தேய்த்து உடனடியாகப் பூரிகளாக பொரிக்க வேண்டியதுதான்.

இப்பொழுது அந்த அசத்தலான ஊதிய மென்மையான பூரி ரெடி . மேலும் குழந்தைகள் விரும்பும் படி பூரி மாவை பெரிய உருண்டையாக எடுத்துக்கொண்டு அதை திரட்டி சோமாசா செய்யும் ஸ்பூனின் பின்பக்க வளைவுகளால் நான்கு துண்டாக கட் செய்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு எடுக்கவும். இந்த பூரியை குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர்.

நான்கு துண்டாக கட் செய்து​பூரி நன்றாக உப்பி வர மேலும் 2 எளிய குறிப்புகள்:

​பூரியைத் திரட்டும்போது மாவைத் தொட்டுத் திரட்டுவதைத் தவிர்த்து, லேசாக எண்ணெய் தொட்டுத் திரட்டவும். இது பொரிக்கும்போது எண்ணெய் வீணாகாமல், கருகாமல் தடுக்கும்.

எண்ணெய் நல்ல அடர்ந்த சூட்டில் (High Heat) இருக்க வேண்டும். பூரியைப் போட்டவுடன் கரண்டியால் லேசாக மேலெழும்பி வரும் பூரியின் மீது எண்ணெயை ஒற்றி எடுத்தால், பூரி பூப்போல உப்பி வரும்!

பூரி அமுங்கிப் போகாமல், கடைகளில் தருவது போலக் புசுபுசுவென உப்பி, நீண்ட நேரம் அதே வடிவத்தோடு இருக்க மேலும் சில அசத்தலான ரகசிய டிப்ஸ்கள் இதோ:

இதையும் படியுங்கள்:
ஹோட்டல் ஸ்டைல் உப்பிய பூரி ரகசியம்: இனி வீடே கொண்டாட்டம்!
மென்மையான பூரி - Soft Poori Recipe

மாவு பிசையும்போது சேர்க்க வேண்டியவை:

​சிறிதளவு சர்க்கரை: மாவு பிசையும் போது 1/4 தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கவும். இது பூரிக்கு நல்ல அழகான பொன்னிறத்தைக் (Golden Color) கொடுக்கும்.

​பால் தெளித்துப் பிசைவது: தண்ணீரோடு சிறிதளவு காய்ச்சிய பால் சேர்த்து மாவு பிசைந்தால், பூரி எண்ணெயை அதிகம் உறிஞ்சாமல் மிகவும் மென்மையாக (Soft) வரும்.

​தயிரின் மாயாஜாலம்: 1 கப் மாவிற்கு 1 தேக்கரண்டி கெட்டித் தயிர் சேர்த்தால், பூரி உப்பலாக வருவதோடு சுவையும் பிரமாதமாக இருக்கும்.

தேய்க்கும்போது கவனிக்க வேண்டியவை:

​சீரான தடிமன் (Uniform Thickness): பூரியைத் திரட்டும்போது நடுப்பகுதி மெலிதாகவும், ஓரங்கள் தடிமனாகவும் இருக்கக் கூடாது. எல்லாப் பக்கமும் ஒரே சீரான தடிமனில் திரட்ட வேண்டும்.

பூரியை மிக மெலிதாக (Thin) சப்பாத்தி போலத் திரட்டக் கூடாது; சற்றுத் தடிமனாக (Slightly Thick) இருந்தால்தான் காற்று உள்ளே அடைபட்டு பூரி உப்பி வரும்.

பூரியைத் திரட்டிய உடனே எண்ணெயில் போடாமல், ஒரு துணியின் மீது பரப்பி 1-2 நிமிடங்கள் கழித்துப் பொரித்தால் பூரி நன்றாக எழும்பும்.

3. பொரிக்கும்போது செய்யவேண்டிய தொழில்நுட்பம்

​புகையும் எண்ணெய் சூடு (Perfect Heat): எண்ணெய் மிதமான சூட்டில் இருந்தால் பூரி உப்பாது, எண்ணெயையும் அதிகளவில் உறிஞ்சிவிடும். எண்ணெய் நன்கு காய்ந்து லேசாகப் புகை வரும் பதம் இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நாவில் கரையும் தித்திப்பு அடை: பலாப்பழம் மற்றும் ராகி அடை ஸ்பெஷல்!
மென்மையான பூரி - Soft Poori Recipe

​கரண்டியால் லேசான அழுத்தம்: பூரியை எண்ணெயில் போட்டதும், கரண்டியால் பூரியின் நடுவே லேசாக அமுக்கி (Gently press) விடவேண்டும். அப்படிச் செய்யும்போது சூடான எண்ணெய் பூரியின் மீது பட்டு உடனடியாகப் பந்து போல உப்பும்.

​ஒரு முறை மட்டுமே திருப்புங்கள்: பூரியை எண்ணெயில் போட்டு உப்பியவுடன் ஒரே ஒருமுறை மட்டுமே திருப்பிப் போட வேண்டும். அடிக்கடி திருப்பினால் உப்பல் அமுங்கிவிடும்.

​Bonus Tip: பூரி மாவு பிசைந்த பிறகு அதை அரை மணி நேரம் ஊறவைக்கக் கூடாது. மாவு ஊறித்தளர்ந்தால் பூரி உப்பாது. பிசைந்த உடனே பூரிகளைப் பொரித்து எடுத்தால் கடலை மாவு பூரி கிழங்குடன் சாப்பிட அற்புதம்!

இந்த ரகசிய முறையை தெரிந்துகொண்டு சரியான அளவுக்கு ரவையை கோதுமை மாவுடன் சிலர் மைதா மாவு பூரி செய்பவர்களும் உண்டு. அவர்களும் ஒரு கப் கோதுமை மாவிற்கு எவ்வளவு ரவை சேர்த்திருக்கிறோமோ அதே அளவு மைதா மாவுடன் சேர்த்து பிசைந்து ஊதிப் போகும் மென்மையான பூரி செய்து அசத்துங்கள்! இதைப் படிப்பதால் புதிதாக சமையல்களை கற்றுக் கொள்பவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com