​உயிர் காக்கும் மருந்துகளே ஆபத்தா? - ஆய்வில் சிக்கிய 159 தரமற்ற மருந்துகள்!

பாராசிட்டமால் முதல் ஆன்டிபயாடிக் வரை... மத்திய அரசு வெளியிட்ட பகீர் தரமற்ற மருந்துகள் பட்டியல்!
தரமற்ற மருந்துகள்
Medicines
Updated on

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவலின் போது, மருந்துகளை ஆன்லைனில் விற்பதற்கான நடைமுறைக்கு மத்திய அரசு ஒப்புதத் அளித்தது. ஆனால் தற்போது நிலைமை சீரான பிறகும் கூட இந்த ஒப்புதலை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை. ஆன்லைனில் தரமற்ற மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும், மருத்துவர் சீட்டு இல்லாமல் விற்பனை நடப்பதாகவும் மருந்தகங்கள் குற்றம் சாட்டின.

இதனால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருந்தகங்கள் அமைப்பு தெரிவித்தது. இதனால் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என நாடு முழுவதும் உள்ள கடந்த மே மாதத்தில் 20,000-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.

இந்நிலையில் சந்தையில் விற்பனையாகும் மருந்துகளின் தரத்தை பரிசோதனை செய்ய மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் (CDSCO), மாநில மருந்து சோதனைப் பிரிவுடன் கைகோர்த்தது. கடந்த மே மாதம் நடத்தப்பட்ட இந்த சோதனையில், சுமார் 159 மருந்துகள் தரமற்றவை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஆகஸ்ட் 20 வரை விண்ணப்பிக்கலாம்: இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!
தரமற்ற மருந்துகள்

மருத்துவச் சந்தையில் போலியான மற்றும் தரமற்ற மருந்துகளின் புழக்கத்தைத் தடுக்கவும், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மருந்து தர ஆய்வுகள் அவ்வப்போது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் தரமற்ற மருந்து விற்பனை கண்டறியப்பட்டால, கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த மே மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் மாநில மருந்து சோதனை ஆய்வகங்களின் மூலம் 113 மருந்து மாதிரிகளும், மத்திய மருந்து சோதனைப் பிரிவுகளின் மூலம் 46 மருந்து மாதிரிகளும் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தாலும், மருந்துகளை வாங்கும் போது குறைந்தபட்சம் காலாவதி தேதியைப் சரிபார்த்து வாங்க வேண்டியது அவசியம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மருந்து தர சோதனையின் போது அசாம் மாநிலத்தில் ஒரு போலி மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, இது குறித்த தீவிர விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. தரமற்ற மருந்துகளின் பட்டியலில் பாராசிட்டமால், ஆன்டி-பயாடிக் மருந்துகள், நீரிழிவு நோய்க்கான மாத்திரைகள், இருமல் மருந்துகள் மற்றும் வைட்டமின் சத்து மாத்திரைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் குறிப்பிட்ட உற்பத்தித் பேட்சுகள் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.

மருந்துகள் தர ஆய்வில் சிக்கிய மருந்துகள் குறிப்பிட்ட சில தயாரிப்பு பேட்சுகள் மட்டுமே. இதன் காரணமாக சந்தையில் கிடைக்கும் மற்ற அனைத்து மருந்துகளும் முழுமையாக தரமற்றவையாக இருக்குமோ என பொதுமக்கள் பயப்பட வேண்டாம். காலாவதி தேதியை சரிபார்த்து வாங்கினாலே போதும் என மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

போலி மருந்து
QR code
இதையும் படியுங்கள்:
ரூ.5,000 விலை உயர்வு.! தலைகீழாக மாறிய தங்கம், வெள்ளி விலை..!
தரமற்ற மருந்துகள்

மருந்து பொருட்களின் மீது QR கோடை அச்சிடும் நடைமுறை அடுத்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. போலி மருந்துகளைத் தடுக்கவே இத்திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துகிறது. மருந்துப் பொருட்களில் அச்சிடப்படும் QR கோடை ஸ்கேன் செய்தால் மருந்து தயாரித்த நிறுவனத்தின் பெயர் முதல் கெண்டு அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

முதல் கட்டமாக புற்றுநோய் மற்றும் ஆன்டி-பயாடிக் மருந்துகளில் QR கோடு அச்சிடப்படவுள்ளது. படிப்படியாக இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டம் முழுமையாக அமலுக்கு வந்த பிறகு போலியான மற்றும் தரமற்ற மருந்துகளின் எண்ணிக்கை குறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com