ரூ.5,000 விலை உயர்வு.! தலைகீழாக மாறிய தங்கம், வெள்ளி விலை..!

தங்கம் விலை
Gold Price
Updated on

உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முதலீடு அதிகரிப்பதும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தொழில்துறையில் வெள்ளியின் தேவை அதிகம் என்பதால், கடந்த ஆண்டில் இருந்தே தொடர் விலை உயர்வை சந்தித்து வருகிறது.

தங்கத்தின் விலையும் ஏற்றம் இறக்கத்தைக் காணும் நிலையில், தற்போது பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லையென்றே சொல்ல வேண்டும். ஆனால் இல்லத்தரசிகள் பலரும் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்திற்கு கீழே எப்போது சரியும் என எதிர்பார்க்கின்றனர்.

நேற்று (ஜூலை 21) தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்தது. வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்தது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,05,760-க்கும், ஒரு கிராம் ரூ.13,220-க்கும் விற்பனையானது. 1 கிராம் வெள்ளி ரூ.240-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனையானது.

நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 22) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,680 உயர்ந்து, ரூ.1,07,440-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.210 உயர்ந்து ரூ.13,430-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.245-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,45,000-க்கு விற்பனையாகிறது.

2025-ம் ஆண்டு இதே ஜூலை 21-ல் 1 சவரன் தங்கம் ரூ.74,280-க்கும், 1 கிராம் ரூ.9,285-க்கும் விற்பனையானது. 2025 ஜூலை 21-ல் 1 கிராம் வெள்ளி ரூ.128-க்கு விற்பனையானது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையோடு கடந்த ஆண்டு விலையை ஒப்பிட்டால், ஒரே ஆண்டில் யாருமே எதிர்பார்க்காத வகையில் விலை உயர்வை சந்தித்துள்ளது. எதிர்பார்க்காத இந்த விலை உயர்வால் தான், தங்கம் மற்றும் வெள்ளி முதலீடு எப்போதுமே நல்ல லாபத்தைக் கொடுக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்

இதையும் படியுங்கள்:
ஆகஸ்ட் 5 பட்ஜெட்... ஆகஸ்ட் 6 வேளாண் பட்ஜெட்! தமிழக சட்டப்பேரவையில் நேரலைக்கு ஏற்பாடு!
தங்கம் விலை
Gold and Silver Rates
Gold and Silver

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

ஜூலை 21: 1 கிராம் - ரூ.13,220 1 சவரன் ரூ.1,05,760

ஜூலை 20: 1 கிராம் - ரூ.13,150 1 சவரன் ரூ.1,05,200

ஜூலை 19: 1 கிராம் - ரூ.13,135 1 சவரன் ரூ.1,05,080

ஜூலை 18: 1 கிராம் - ரூ.13,135 1 சவரன் ரூ.1,05,080

ஜூலை 17: 1 கிராம் - ரூ.13,100 1 சவரன் ரூ.1,04,800

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

ஜூலை 21: 1 கிராம் - ரூ.240

ஜூலை 20: 1 கிராம் - ரூ.235

ஜூலை 19: 1 கிராம் - ரூ.235

ஜூலை 18: 1 கிராம் - ரூ.235

ஜூலை 17: 1 கிராம் - ரூ.235

இனி வருங்காலத்தில் தங்கத்தின் விலை கண்டிப்பாக உயரும் என்ற கணிப்பே முதலீட்டுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த தங்கத்தின் விலையைப் பார்த்தாலே இது புரிந்து விடும். இருப்பினும் வெள்ளியின் விலை உயர்வது சற்று கடினம் தான். நடப்பாண்டின் தொடக்கத்தில் உச்சத்தை தொட்ட வெள்ளி, இப்போது பாதியாக சரிந்துள்ளது

இதையும் படியுங்கள்:
ஆகஸ்ட் 20 வரை விண்ணப்பிக்கலாம்: இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com