#BREAKING: மக்கள் தொகை கணக்கெடுப்பு: சாதி வாரியான விவரங்கள் சேர்ப்பில் அரசு தனித் தீர்மானம்.!

மக்கள் தொகை கணக்கெடுப்பு
Census
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தமிழக அரசின் சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் (செப்டம்பர் 8) முடிவுக்கு வருகிறது. கடந்த ஜூன் 18-ம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர், ஒரு மாதத்திற்கும் மேல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று ஆளுநரீ அர்லேகர் உரையுடன் முடிவடையும் சட்டப் பேரவை கூட்டத் தொடர், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படும். கடைசி நாளான இன்று மட்டும் 8 துறைகள் மீதான விவாதங்களுக்கு அமைச்சர்கள் பதிலுரை அளிக்க உள்ளனர். நேற்றைப் போலவே இன்றும் சட்டப் பேரவையில் வினாக்கள் - விடைகள் நேரம் இல்லை.

இதையும் படியுங்கள்:
#BREAKING: முதல்வர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க முடியாது.. சபாநாயகர் அதிரடி.!
மக்கள் தொகை கணக்கெடுப்பு

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் SC/ST வகுப்பினரின் விவரங்களை சேகரிப்பது போலவே, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் விவரங்களையும் சேகரிக்க மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தார். சாதி வாரியான கணக்கெடுப்பில் திறந்த வெளிப் பதிவு தெளிவற்ற தன்மையை உருவாக்கி விடும் என்பதால் இதனைக் கைவிட வேண்டும் என அமைச்சர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

MBC சாதி விவரங்களை மாநில அரசு வெளியிட்ட பட்டியலில் சேகரிக்க வேண்டும். சாதவிரங்களை சேர்க்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இருப்பினும் இதனை திறந்த வெளிப் பதிவாக இருப்பதை ஏற்க முடியாது.

அமைச்சரின் தீர்மானத்தை அமைச்சர் வன்னி அரசு வரவேற்றார்.

இட ஒதுக்கீடு தொடர்பான இந்த தனித் தீர்மானத்தை ஐயூஎம்எல் கட்சி வரவேற்பதாக அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.

அரசின் தனித் தீர்மானத்திற்கு காங்கிரஸ் கட்சியும் வரவேற்பு அளித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com