#BREAKING: முதல்வர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க முடியாது.. சபாநாயகர் அதிரடி.!

JCD Prabhakar
JCD
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தமிழக அரசின் சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் (செப்டம்பர் 8) முடிவுக்கு வருகிறது. கடந்த ஜூன் 18-ம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர், ஒரு மாதத்திற்கும் மேல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று ஆளுநரீ அர்லேகர் உரையுடன் முடிவடையும் சட்டப் பேரவை கூட்டத் தொடர், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படும்.

கடைசி நாளான இன்று மட்டும் 8 துறைகள் மீதான விவாதங்களுக்கு அமைச்சர்கள் பதிலுரை அளிக்க உள்ளனர். நேற்றைப் போலவே இன்றும் சட்டப் பேரவையில் வினாக்கள் - விடைகள் நேரம் இல்லை.

இதையும் படியுங்கள்:
#BREAKING: இனி சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு கிடையாது - அமைச்சர் லோகேஷ்..!
JCD Prabhakar

தமிழக முதல்வர் விஜய் சட்டப்பேரவலயில் சர்க்காரியா கமிஷன் மற்றும் மிசா உள்ளிட்டவை குறித்து பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக கொறடா எ.வ.வேலு கோரிக்கை விடுத்தார்.

ஆனால் இது பற்றி ஏற்கனவே பலமுறை சட்டப்பேரவையில் பேசப்பட்டது தான். ஆகையால் இதனை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இந்நிலையில் சர்க்காரியா கமிஷன் மற்றும் மிசா குறித்து மீண்டும் பேசினார் அமைச்சர் நிர்மல் குமார்.

நாங்கள் பேசினாலே திமுகவினர் பயப்படுகின்றனர் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசினார். தவெக ஆட்சியில் எந்தத் துறையிலும் திமுக போல் நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம் எனவும் அவர் பேசினார். அமைச்சர்களின் பேச்சைக் கேட்டு திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் விடுத்த முக்கிய வேண்டுகோள்.!
JCD Prabhakar

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசுகையில், "சர்க்காரியா கமிஷன் குறித்து பேசும் போது திமுகவினர் காது கொடுத்து கேட்கவில்லை. இதகுறித்து முன்னரே என்னிடம் கலந்தாலோசித்தார் முதல்வர். சர்க்காரியா கமிஷன் குறித்து பேரவையில் பலமுறை விவாதிக்கப்பட்டது. முதல்வர் அமலாக்கத்துறை அறிக்கையில் இருந்ததை தான் பிடித்தார். தீர்ப்பை பற்றி குறிப்பிடவில்லை. ஆகையால் சர்க்காரிய கமிஷன் மற்றும் மிசா குறித்து பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறினார்.

logo
Kalki Online
kalkionline.com