மத்திய அரசின் திடீர் அறிவிப்பு: பான் கார்டுக்கு விண்ணப்பிக்க இனி ஆதார் மட்டும் போதாது..!

PAN Card
PAN Card
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

பான் கார்டு விண்ணப்பிக்க ஆதார் மட்டும் போதாது என்று ஏப்ரல் 1 முதல் புதிய விதிமுறை அமல்படுத்தப்பட உள்ளது.

பான் கார்டுக்கு விண்ணப்பிக்க இனி ஆதார் மட்டும் போதாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பான் கார்டு விண்ணப்பிக்க ஆதார் அட்டையுடன் பிறப்பு சான்றுக்கான கூடுதல் ஆவணமும் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்று தெரிவித்துள்ளது.

இதுவரை பான் கார்டு பெறுவதற்கு ஆதார் அட்டை மட்டுமே போதுமானதாக இருந்தது. ஆனால் வரும் ஏப்ரல் 1, 2026 முதல் பான் கார்டு விண்ணப்பிப்பதற்கு ஆதார் மட்டுமே போதாது என்று விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 31ஆம் தேதி வரை விண்ணப்பிப்பவர்களுக்கு பழைய நடைமுறைப்படி ஆதார் மட்டுமே போதுமானது. ஆனால் ஏப்ரல் 1 முதல் பிறப்புச் சான்றுக்கான கூடுதல் ஆவணம் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

வருமானவரித் தாக்கல் முதல் வங்கி பரிவர்த்தனைகள் வரை அனைத்திற்கும் அவசியமான பான் கார்டு அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கு பிறந்த தேதிக்கான ஆதாரமாக பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate), வாக்காளர் அடையாள அட்டை (Voter ID), பாஸ்போர்ட் (Passport), ஓட்டுநர் உரிமம் (Driving Licence), பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்விச் சான்றிதழ்கள் (Marksheets / TC) போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பிறந்த தேதிக்கான ஆவணமாக இணைக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
சொத்து வாங்குவோருக்கு குட் நியூஸ்: ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்..!
PAN Card

பான் கார்டு வருமான வரித்துறையால் வழங்கப்படும் முக்கிய அடையாள ஆவணமாகும். இது வருமான வரித் தாக்கல் செய்வதற்கும், வங்கியில் சேமிப்பு அல்லது கணக்கு தொடங்குவதற்கும் அவசியமாகும். வீடு அல்லது நிலம் வாங்கும் பொழுது அல்லது விற்கும் பொழுது பான் கார்டு எண் கேட்கப்படும். இது இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வ அடையாள ஆவணமாகும். 10 இலக்கங்களைக் கொண்ட இந்த பான் கார்டை வருமான வரித்துறையின் கீழ் செயல்படும் இணையதளத்தில் விண்ணப்பித்து பெற முடியும்.

logo
Kalki Online
kalkionline.com