எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) 1,121 காலி இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதாவது தலைமை காவலர் (ரேடியோ ஆபரேட்டர்) மற்றும் தலைமை காவலர் (ரேடியோ மெக்கானிக்) போன்ற பணிகளில் விருப்புமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி இன்று (செப்டம்பர் 23, 2025) இரவு 11:59 மணி ஆகும்.
கல்வித் தகுதிகள்
தலைமை காவலர் (ரேடியோ ஆபரேட்டர்)
12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்புடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வேதியியல், மற்றும் கணிதப் பாடங்களில் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது 10ம் வகுப்புடன் கீழுள்ள பிரிவுகளில் இரண்டு வருட தொழில்துறை பயிற்சி நிறுவன சான்றிதழ் (ITI) பெற்றிருக்க வேண்டும்:
ரேடியோ மற்றும் தொலைக்காட்சி, எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட் (COPA), டேட்டா ப்ரிபரேஷன் அண்ட் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் (DPCS), ஜெனரல் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO).
தலைமை காவலர் (ரேடியோ மெக்கானிக்):
12ஆம் வகுப்புடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வேதியியல், மற்றும் கணிதப் பாடங்களில் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது 10ம் வகுப்புடன் கீழுள்ள பிரிவுகளில் இரண்டு வருட தொழில்துறை பயிற்சி நிறுவன சான்றிதழ் (ITI) பெற்றிருக்க வேண்டும்:
ரேடியோ மற்றும் தொலைக்காட்சி, ஜெனரல் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட் (COPA), டேட்டா ப்ரிபரேஷன் அண்ட் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் (DPCS), எலக்ட்ரீஷியன், பிட்டர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் மெயின்டெனன்ஸ், கம்யூனிகேஷன் எக்யூப்மென்ட் மெயின்டெனன்ஸ், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், நெட்வொர்க் டெக்னீசியன், மெகாட்ரானிக்ஸ், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO)
வயது வரம்பு மற்றும் தளர்வுகள் வயது:
செப்டம்பர் 23, 2025 அன்று 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வுகள்:
SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்
OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள்
PwBD (பொது/EWS) விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
PwBD (SC/ST) விண்ணப்பதாரர்களுக்கு: 15 ஆண்டுகள்
PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: 13 ஆண்டுகள்
சம்பள விவரம்
ஊதிய நிலை 4-இன் படி, சம்பளம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை இருக்கும்.
தேர்வு முறை
தேர்வு முறை பின்வரும் நான்கு கட்டங்களாக நடைபெறும்:
1. PST (உடல் தர நிர்ணயத் தேர்வு) & PET (உடல் திறன் தேர்வு)
2. கணினி அடிப்படையிலான தேர்வு
3. ஆவணச் சரிபார்ப்பு
4. விரிவான மருத்துவப் பரிசோதனை
விண்ணப்பக் கட்டணம்
SC/ST மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு: கட்டணம் இல்லை.
மற்ற விண்ணப்பதாரர்களுக்கு: ரூ.100/-.
கட்டணம் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் BSF-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://rectt.bsf.gov.in/ க்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். தமிழகத்தில் தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.