சீல் வைக்கப்பட்ட பாக்ஸ்.. உள்ளே போலி போன்! ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிர்ச்சி தரும் புதிய மோசடி!

சமீப காலமாக Amazon அல்லது Flipkart போன்ற தளங்களில் நீங்கள் அசல் போனை ஆர்டர் செய்யும்போது, டெலிவரி வழியிலேயே அது போலியான போனாக மாற்றப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
ஆன்லைன் போன் மோசடி
ஆன்லைன் போன் மோசடிAI Image
Updated on

இந்தியா முழுவதும் ஒரு புதிய போலி ஸ்மார்ட்போன் மோசடி பரவி வருகிறது! அசல் சாதனங்களைப் போலவே அச்சு அசலாகத் தோற்றமளிக்கும் சீல் வைக்கப்பட்ட (Sealed Box) ஸ்மார்ட்போன் பெட்டிகளை வைத்து (Fake Smartphone Scam)விற்பனை செய்வது ஒரு பெரிய மோசடியாகும். சமீப காலமாக Amazon அல்லது Flipkart போன்ற தளங்களில் நீங்கள் அசல் போனை ஆர்டர் செய்யும்போது, டெலிவரி வழியிலேயே அது போலியான போனாக மாற்றப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

மோசடி செய்பவர்கள், அசல் சாதனங்களைப் போலவே தோற்றமளிக்கும் சீல் வைக்கப்பட்ட ஸ்மார்ட்போன் பெட்டிகளை விற்கிறார்கள்; ஆனால், அந்தப் பெட்டிகளுக்குள் உண்மையான போன் இருப்பதில்லை அல்லது அது வேறொரு பழைய போனால் மாற்றப்பட்டிருக்கும்.

அவர்கள் காட்டும் போன்கள் பார்ப்பதற்கு அப்படியே அசல் (Original) போலவே இருக்கும், ஆனால் உள்ளே இருக்கும் பாகங்கள் அனைத்தும் மிக மலிவான போலிப் பொருட்கள் (Dummy/First Copy) ஆகும்.

பழைய அல்லது பயன்படுத்தப்பட்ட போன்களை கடைகளில் வாங்கி, அதை சுத்தப்படுத்தி, அசல் பெட்டி போலவே புதிய ஸ்டிக்கர்கள் மற்றும் சீலிங் (Resealing)செய்து விற்பனை செய்கிறார்கள். உதாரணமாக அசல் நிறுவனங்களின் பெயரில் இயங்குதளம் (Android) மற்றும் தோற்றம் மட்டுமே ஒத்திருக்கும் ஆனால் தரம் குறைந்த போன்கள் பெட்டிக்குள் வைக்கப்படுகின்றன.

இந்த மோசடி எவ்வாறு செயல்படுகிறது, கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள் என்ன, மற்றும் பாதுகாப்பாக இருக்கவும், இந்த மோசடியில் சிக்காமல் இருக்க ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எவை என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்துகொள்ளலாம் வாங்க.

அசல் என்று நம்பி ஆயிரக்கணக்கில் கொடுத்து வாங்கும் போன் சில நாட்களிலேயே பழுதடைந்து முற்றிலும் பயனற்றதாகிவிடும்.

நீங்க ஆன்லைனில் போன் ஆர்டர் செய்து வாங்கியே போனை ஆன் செய்யும் போது போனின் நடுவில் திடீரென ஒரு கோடு விழுவது அல்லது ஏற்கனவே அந்த போனை யூஸ் பண்ணி பேட்டரி ஹெல்த் எல்லாம் கம்மியாகி இருக்கு, யூஸ் பண்ண பழைய போனை நம்ப தலையில் கட்டியிருக்காங்கனு நீங்க சந்தேகப்பட்டால், அது உண்மை தாங்க... இப்போது இதுபோன்ற மோசடிகள் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

Amazon and Flipkart-லும் ஒரு சில விற்பனையாளர் மூலமாக இதுபோன்ற போலியான செல்போன்கள் புதுசு என்று விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் பொதுமக்கள் ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்யும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.

ஆன்லைன் போன் மோசடி
ஆன்லைன் போன் மோசடிAI Image

நீங்கள் வாங்கிய போன் போலியா, புதுசானு தெரிந்து கொள்வது எப்படி?

குறைந்த விலைக்கு பிராண்டட் போன்களைத் தருவதாகக் கூறி, பழைய அல்லது போலியான உதிரிபாகங்களைக் கொண்ட போன்களைப் புதியவை போல பாலித்தீன் கவர் போட்டு விற்கும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன.

அமேசான், பிளிப்கார்ப் போன்ற ஆன்லைன் தளங்களில் ஆர்டர் செய்யும் போது, பார்சலை வாங்கும் முன்பே பிரித்து சரிபார்க்கும் வசதியைப் (Open Box Delivery) பயன்படுத்தவும்.

ஆன்லைன் டெலிவரியின் போது, போன் பாக்ஸை ஓபன் செய்து அதன் IMEI எண்ணை (*#06#) சரிபார்த்து வாங்குவது பாதுகாப்பானது. அதாவது, ஓபன் பாக்ஸ் டெலிவரியாக இருந்தாலுமே OTP எடுத்த உடனேயே தராதீங்க. முதலில் அந்த போனை வாங்கி பிரிந்து பின்னாடி திருப்பி IMEI நம்பரை கிராஸ் செக் பண்ணுங்க.

இதையும் படியுங்கள்:
ஸ்மார்ட்போன்: மெல்லக் கொல்லும் டிஜிட்டல் விஷமா?
ஆன்லைன் போன் மோசடி

ஒவ்வொரு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று, போனின் IMEI அல்லது Serial நம்பரை உள்ளிட்டு அது புதிய போனுக்கான உத்தரவாதத்தைக் காட்டுகிறதா (Warranty Check)என்பதை சரிபார்க்கவும்.

அதாவது, எந்த பிராண்டாக இருந்தாலும் வாரண்டியை (warranty) சரிபார்ப்பதற்கு அவங்களுடைய அதிகாரப்பூர்வ பிராண்ட் இணையதளம் (official brand website) இருக்கும். அந்த வெப்சைட்டிற்கு சென்று அதில் அந்த பாக்சில் உள்ள IMEI நம்பரை போட்டு அது புது போன் தானா என்பதை சோதித்து பாருங்க.

அந்த போன் திருட்டு போன் இல்லை என்பதை சரிபார்ப்பதற்கு அரசின் CEIR உடைய அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (official website) சென்று அதில் அந்த IMEI நம்பரை போட்டு நீங்கள் வாங்கிய செல்போன் புதிது என்பதை சரிபார்த்து கொள்ளலாம்.

அடுத்து உங்கள் போனின் 'Setting' சென்று 'About Phone' என்பதைத் தட்டுங்கள் அல்லது போனில் *#06# என டைப் செய்து IMEI எண்ணை வெளியில் உள்ள பெட்டியின் மீதுள்ள எண்ணுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும். இரண்டும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் வாங்கியது புது செல்போன் தான் என்பது உறுதியாகும்.

கடைசியாக Google play store-ல் இருக்கக் கூடிய Free App யூஸ் செய்து உங்க போனில் இருக்கக்கூடிய சென்சார், டிஸ்பிளே எல்லாம் சரியாக வேலை செய்கிறதா என்பதையும் ஒருமுறை பரிசோதனை செய்து பார்த்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
‘M-Kavach 2’ : மோசடி நபர்களிடமிருந்து ஸ்மார்ட்போன் தரவுகளை பாதுகாக்கும் App! அவசியம் தெரிஞ்சுக்கோங்க மக்களே!
ஆன்லைன் போன் மோசடி

மோசடிகளில் இருந்து தப்பிக்க ஆன்லைனில் போன் வாங்கும் போது அதிகாரப்பூர்வ இணையதளங்கள் அல்லது சான்றளிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் மட்டுமே வாங்குங்கள்.

logo
Kalki Online
kalkionline.com