சட்டசபை முதல் கில்லி வரை: சென்னையில் வைரலாகும் முதல்வர் விஜய் விநாயகர் சிலைகள்!

சென்னை வீதிகளில் மக்கள் கூட்டத்தை ஈர்க்கும் விதவிதமான வடிவங்களில் அமைக்கப்பட்ட நவீன விநாயகர் சிலைகள்.
விநாயகர் சிலைகள்
Vinayagar Chadurthi
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

நாடு முழுவதும் இன்று (செப்டம்பர் 14) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஆங்காங்கே வண்ணமயமான விநாயகர் சிலைகளை பல்வேறு வடிவங்களில் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, புதுப்புது டிசைன்களில் விநாயகர் சிலைகளை வைப்பது தற்போது வழக்கமாகி விட்டது. அவ்வகையில் தற்போது தமிழக முதல்வர் விஜய்யின் உருவத்தை ஓத்திருக்கும் விநாயகர் சிலைகள் தலைநகர் சென்னையில் வைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் விஜய் போல் இருக்கும் விநாயகர் சிலைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், பலரும் விநாயகர் சிலையுடன் செல்ஃபி எடுத்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
விஜய் - அஜித் சந்திப்பில் இப்படியொரு அரசியல் காரணமா.? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.!!
விநாயகர் சிலைகள்

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டகயுள்ளது. தமிழக முதல்வர் விஜய் போல் சைகை காட்டும் விநாயகர் சிலைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சென்னை கொருக்குப்பேட்டையில் முதல்வர் விஜய் சட்டசபையில் சைகை காட்டியது போல் இருக்கும் ஒரு விநாயகர் சிலை, பலரையும் கவர்ந்துள்ளது. அதோடு கில்லி திரைப்படத்தில் விஜய் கபடி விளையாடும் போது வரும் காட்சியை அப்படியே விநாயகர் சிலைக்கு பொருத்தியுள்ளனர் சென்னை வாசிகள்.

இதுமட்டுமின்றி தவெக கட்சியை ஆரம்பித்த பிறகு முதல்வர் விஜய் பிரச்சாரத்திற்கு சென்ற போது சைக்களில் சென்றும் வாக்கு சேகரித்தார். சைக்கிளில் விஜய் செல்லும் அந்தக் காட்சியை ஒத்திருக்கும் வகையிலும் ஒரு விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

காண்போரை கவர்ந்திழுக்கும் விநாயகர் சிலைகள், முதல்வர் விஜய்யைப் போல் இருப்பதால் பொதுமக்ள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
விநாயகர் சதுர்த்தியில் ஆஃபர்: அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ...
விநாயகர் சிலைகள்

சட்டசபை முதல்வர் விஜய் முதல் கில்லி கபடி வீரர் விஜய் வரை பல்வேறு தோற்றங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டிருப்பது தான் இன்றைய தினத்தில் இணையத்தில் டிரெண்டிங் ஆக உள்ளது.

இதுதவிர சென்னை திருவல்லிக்கேணியில் 'மார்க்கெட் ராஜா' மற்றும் 'Don of Triplicane' என வித்தியாசமான பெயர்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு முதல்வர் விஜய் தமிழக மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். முதல்வர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்! மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்!” என தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார் முதல்வர் விஜய்.

logo
Kalki Online
kalkionline.com