விஜய் - அஜித் சந்திப்பில் இப்படியொரு அரசியல் காரணமா.? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.!!

​தவெக வாக்கு வங்கியை உயர்த்துமா விஜய் அஜித் இணைவு?
விஜய் - அஜித்
Vijay - Ajith
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தமிழக முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க கடந்த செப்டம்பர் 10-ம் தேதி பிரிட்டனுக்குச் சென்றார். முதல்வர் விஜய் பிரிட்டனுக்கு செல்லும் போதே, லண்டனில் நடக்கும் கார் ரேஸ் பந்தயத்தை தொடங்கி வைப்பார் என சொல்லப்பட்டது. இதற்கு முக்கிய காரணமே நடிகரும், ரேஸருமான அஜித் தான். லண்டன் சில்வர் ஸ்டோன் மைதனாத்தில் மிச்செலின் லீ மேன்ஸ் கார் ரேஸ் பந்தயம் நேற்று (செப்டம்பர் 12) நடைபெற்றது. இந்தப் போட்டியை தமிழக முதல்வர் விஜய் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

போட்டிக்கு முன்பாக நடிகர் அஜித்குமாரை கட்டியணைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார் முதல்வர் விஜய். லண்டனில் நடைபெற்ற கர் ரேஸிங்கைக் காண நடிகை த்ரிஷாவும் வந்திருந்தார்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் தற்போதும் தங்களது திரைப் பயணத்தில் இருந்து மாற்றுப் பாதையில் பயணித்து வருகின்றனர். சினிமாவை விட்டு அரசியலில் இறங்கிய நடிகர் விஜய் தற்போது தமிழக முதலமைச்சராக இருக்கிறார்.

அதேசமயம் சினிமாவில் நடித்துக் கொண்டே அவ்வப்போது கார் பந்தயங்களில் பங்கேற்று வரும் நடிகர் அஜித், தற்போது கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: முதல்வருக்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட்.! இடைத்தேர்தலில் தவெக-வுக்கு ஆதரவு அளிக்க தயக்கம்.!
விஜய் - அஜித்

சினிமா துறையில் இருந்த வரையில் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரும் எதிர் எதிராகவே இருந்தனர். அதிகமாக பேசிக் கொண்டதில்லை; அதிகமாக சந்தித்துக் கொண்டதில்லை. ஆனால் இருவரது பாதையும் வேறு வேறான நிலையில், தற்போது நெருங்கிய நண்பர்கள் போல சிரித்து பேசிக் கொள்வது, அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பின்னர் அரசியல் சூட்சுமம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

முதல்வர் விஜய் மற்றும் நடிகர் அஜித்தின் இந்த சந்திப்பு, தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பலமாக எதிரொலிக்கும் எனவும் விமர்சனம் செய்யப்படுகிறது. விஜய் மற்றும் அஜித்தின் இந்த சந்திப்பால் இடைத்தேர்தலில் அஜித் ரசிகர்களின் வாக்கு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

இது மட்டுமல்ல அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இது எதிரொலிக்கும் எனக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதல்வர் விஜய்க்கு இணையான ஒரு பெரும் ரசிகர் கூட்டம் அஜித்திற்கும் இருக்கிறது. ஆகையால் நடிகர் அஜித்துடன் நட்புறவை மேம்படுத்தினால் அது தவெக-விற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என முதல்வர் விஜய்க்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் முதல்வர் விஜய் மற்றும் அஜித் இடையேயான நட்பு தற்போது வெளியுலகம் வியக்கும் அளவிற்கு உள்ளது.

அஜித் - விஜய்
Vijay - Ajith
இதையும் படியுங்கள்:
ஐ.நா, உலக வங்கிக்கு பிரதமர் மோடி வைத்த அதிரடி ‘செக்மேட்’.! ஆடிப்போன சர்வதேச நாடுகள்.!
விஜய் - அஜித்

நேற்று நடந்த கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் அணி 8-ம் இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கார் பந்தய போட்டி முடிந்த பிறகு நடிகர் அஜித் மற்றும் முதல்வர் விஜய் ஆகிய இருவரும் ரேசிங் உடையில், இந்தியாவின் தேசிய கொடியான மூவர்ண கொடியை கையில் பிடித்து தேசப்பற்றை வெளிப்படுத்தினர்.

பிஸியான நேரத்திலும் நான் அழைத்ததன் பேரில் கார் பந்தயத்தைப் பார்ப்பதற்காக முதல்வர் விஜய் இங்கே வந்தது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என நடிகர் அஜித் தெரிவித்தார். மேலும் என்னுடைய சக நண்பர் முதல்வரானது மகிழ்ச்சியாக உள்ளது எனவும் அஜித் தெரிவித்தார்.

பட்ஜெட் கூட்டத் தொடரின் போது தமிழ்நாட்டில் மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் மையம் தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு நடிகர் அஜித் நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

logo
Kalki Online
kalkionline.com