விநாயகர் சதுர்த்தியில் ஆஃபர்: அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ...

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரத்தில் ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும், வெறும் 160 ரூபாய் மட்டுமே குறைந்தது. ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,520-க்கு விற்பனையானது.

கடந்த வார இறுதியில் தங்கத்தின் விலை ரூ.1,13,360 என்ற விலையுடன் நிறைவுற்றது. இந்த வாரத்தில் தங்கத்தின் விலை குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று (செப்டம்பர் 13) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் விற்பனையானது.

நேற்று (செப்டம்பர் 13) தங்கத்தின் விலை ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.14,170-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,360-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.250-க்கு விற்பனையானது.

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், விநாயகர் சதுர்த்தி தினமான இன்று (செப்டம்பர் 14) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45 குறைந்து ரூ.14,125-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.360 குறைந்து, ரூ.1,13,000-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்:
#BIG BREAKING: இனி டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்சி முறை தான்: முதல்வர் விஜய் அதிரடி.!
தங்கம் விலை
Gold Price Updates
Gold Price AI Image

இந்தியாவில் விரைவில் மத்திய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்கவுள்ளது. அதேசமயம் இந்த வாரத்தில் அமெரிக்காவிலும் மத்திய வங்கிகள் கூட்டம் நடக்கவுள்ளது. இந்த 2 கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்து அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலை ரூ.10,000-க்கும் மேல் குறைய வாய்ப்புள்ளது.

இன்னும் சில நாட்களில் தங்கத்தின் உண்மையான விலை நிலவரத்தை நாம் பார்ப்போம் என பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக இம்மாத இறுதிக்குள் தங்கத்தின் விலை மிகப்பெரிய அளவில் சரிவை சந்திக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

இதையும் படியுங்கள்:
விஜய் - அஜித் சந்திப்பில் இப்படியொரு அரசியல் காரணமா.? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.!!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com