சென்னையில் இரவு நேர மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்: ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 6 வரை ரத்து..!

சென்னை எழும்பூர் ரயில் நிலையப் பணிகள்: ஆகஸ்ட் 25 முதல் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து - ரயில்வே புதிய அறிவிப்பு!
Chennai egmore railway station
Egmore
Updated on

சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் மறுசீரமைப்பு பணி​கள், சுமார் ரூ.842 கோடி மதிப்​பில், பல கட்​டங்​களாக நடைபெற்று வருகின்றன . இதன் 2-ம் கட்​ட​மாக, புதிய நடைமேடை அமைக்​கும் பணி​கள் கடந்த ஜூலை முதல் இரண்டு பிரிவு​களாக நடை​பெறுகின்​றன.இதன் ஒருபகுதியாக தற்போது இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாளை (22-ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரையில் இரவு நேர மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 25-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரையில் இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி (5 மணி நேரம்) வரையில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது.

அதன்படி, வருகிற 25-ந்தேதி முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரையில் (வாரநாட்களில் மட்டும்) ரத்து மற்றும் பகுதி நேர ரத்து செய்யப்படும் ரெயில்களின் விவரங்கள் வருமாறு:-

* கடற்கரையில் இருந்து இரவு 10.20, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

* திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரெயிலும், கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.15, 11.20 ஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரெயில்களும், செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

Electric train services
Train service

* கடற்கரையில் இருந்து இரவு 9.45 மணிக்கு கூடுவாஞ்சேரி செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 9.50 மணிக்கு கூடுவாஞ்சேரி செல்லும். கடற்கரையில் இருந்து இரவு 10.20 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 10.15 மணிக்கு செங்கல்பட்டு செல்லும்.

* கடற்கரையில் இருந்து வருகிற 26-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரையில் (வாரநாட்களில்) அதிகாலை 3.50 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, வருகிற 30 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) ரத்து மற்றும் பகுதிநேர ரத்து செய்யப்படும் மின்சார ரெயில்களின் விவரங்கள் வருமாறு:-

* கடற்கரையில் இருந்து இரவு 10, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரெயிலும், தாம்பரத்தில் இருந்து இரவு 11, 11.40 ஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

* கடற்கரையில் இருந்து இரவு 9.40 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 9.50 மணிக்கு செங்கல்பட்டு செல்லும்.

கடற்கரையில் இருந்து இரவு 9.50 மணிக்கு கூடுவாஞ்சேரி செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 10.10 மணிக்கு கூடுவாஞ்சேரி செல்லும்.

மேலும், கடற்கரையில் இருந்து இரவு 10.20 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 10.25 மணிக்கு தாம்பரம் செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
'மொத ராத்திரி' விமர்சனம் - ஆபாசம் இல்லாத காதல் த்ரில்லர்!
Chennai egmore railway station
logo
Kalki Online
kalkionline.com