உடனே விண்ணப்பிங்க..! சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ₹2,70,000 சம்பளத்தில் வேலை..!

metro
Chennai Metro Rail
Published on

தமிழக அரசிற்கு சொந்தமான சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனத்தில் (CMRL), புதிய வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசல்களை சமாளிக்கவும் ,  வேகமான வளர்ந்து வரும் மாநில தலைநகரின் வேகத்திற்கு ஈடு செய்யும் வகையில், போக்குவரத்து வசதியினை மேம்படுத்தவும் தமிழக அரசு மெட்ரோ ரயில்வே திட்டத்தினை தொடங்கி செயல்படுத்தி வருகிறது.

 2015 ஆம் ஆண்டிலிருந்து சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனம் தன் சேவையை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் , மெட்ரோ  விரிவாக்கப் பணிகளுக்காகத் தகுதியான மேலாளர் பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கு சிவில் பொறியியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. 

காலியிடங்கள் விவரம்: 

சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனத்தில்   ஒப்பந்த அடிப்படையில், கட்டுமானத்துறையில் 19 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அவை தலைமை பொது மேலாளர் (CGM) மற்றும் பொது மேலாளர் (GM) ஆகிய பதவிகளுக்கு மொத்தமாக  4 காலியிடங்கள் உள்ளன. கூடுதல் பொது மேலாளர் , இணை பொது மேலாளர் , துணை பொது மேலாளர் 

ஆகிய பதவிகளுக்கு மொத்தமாக 8 பணியிடங்கள் உள்ளன. மேலாளர் , துணை மேலாளர் , உதவி  மேலாளர் ஆகிய  பணிகளுக்கு 7 பணியிடங்களும் உள்ளன. 

வயது வரம்புகள் : 

1.தலைமை பொது மேலாளர்  – 55 ஆண்டுகள்

2.பொது மேலாளர் – 55 ஆண்டுகள்

3.கூடுதல் பொது மேலாளர் – 47 ஆண்டுகள்

4. இணை பொது மேலாளர்  – 43 ஆண்டுகள்

5.துணை பொது மேலாளர் – 40 ஆண்டுகள்

6.மேலாளர் – 38 ஆண்டுகள் 

7.துணை மேலாளர்  – 35 ஆண்டுகள்

8.உதவி மேலாளர்  – 30 ஆண்டுகள்


கல்வித்தகுதி: 

விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் B.E/B.Tech ஆகிய படிப்புகளை முடித்திருக்க வேண்டும் அல்லது M.E/M.Tech ஆகிய முதுகலைப் பொறியியல் பட்டப் படிப்புகளை முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் 20  ஆண்டுகள் வரை தகுந்த பொறியியல் பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

​விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில்  முன்னுரிமை தரப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இதில் வெற்றி பெற்றால் அடுத்தக் கட்டமாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தகுதி உள்ளவர்கள் ஒப்பந்த பணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சம்பள விவரம்: 

1.தலைமை பொது மேலாளர்  – ₹2,70,000

2.பொது மேலாளர் – ₹2,25,000

3.கூடுதல் பொது மேலாளர் – ₹ 1,60,000

4. இணை பொது மேலாளர்  – ₹1,45,,000

5.துணை பொது மேலாளர் – ₹1,25,000

6.மேலாளர் – ₹85,000

7.துணை மேலாளர்  – ₹75,000

8.உதவி மேலாளர்  – ₹62,000

விண்ணப்பிக்க: 

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க  

https://careers.chennaimetrorail.org/என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.

விண்ணப்பிக்க தேதிகள்: 

விண்ணப்பிக்க தொடக்க தேதி: 06.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.02.2026

விண்ணப்ப கட்டணம் : 

விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ₹300 , எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ₹50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் போது கல்வித்தகுதி, அனுபவம், அடையாள சான்று, புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்.! அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ரூ.1 கோடி வரை காப்பீடு.!
metro

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com