சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான புறநகர் ரயில்கள் ரத்து: தென்னக ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக அக்டோபர் 4 வரை இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து மற்றும் மாற்றம்!
தாம்பரம் ரயில்வே சந்திப்பு
தாம்பரம் ரயில்வே சந்திப்பு
Updated on: 

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான பல புறநகர் மின்சார ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகத் தென்னக ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.

ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, கடற்கரை - தாம்பரம் தடத்தில் நான்கு மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன.

ரத்து செய்யப்படும் ரயில் சேவைகளின் விவரம்

  • சென்னை கடற்கரை - தாம்பரம் (இரவு 11.59 மணி): சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சனிக்கிழமை (செப். 26) முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

  • தாம்பரம் - சென்னை கடற்கரை (இரவு 8.45 மணி): தாம்பரத்திலிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், செப்டம்பர் 26, 28, 29, 30 மற்றும் அக்டோபர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

  • தாம்பரம் - சென்னை கடற்கரை (இரவு 11.40 மணி): தாம்பரத்திலிருந்து இரவு 11.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் ரத்து செய்யப்படுகிறது. இரவு நேரங்களில் பயணிக்கும் பயணிகள் இம்மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு தங்களது பயணங்களைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Train
Train

அதேப்போல் சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள டாடா (Tada) மற்றும் சூலூர்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே, செப்டம்பர் 25, 28 மற்றும் அக்டோபர் 2, 5 ஆகிய தேதிகளில் இரவு 23:35 மணி முதல் காலை 07:05 மணி வரை (7 மணி நேரம் 30 நிமிடங்கள்) ரயில் பாதை மற்றும் மின்சார விநியோகத் தடை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, EMU ரயில் சேவைகளில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

செப்டம்பர் 26, 29 மற்றும் அக்டோபர் 3, 6 ஆகிய தேதிகளில் EMU ரயில் சேவைகள் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. அதன்விவரங்கள் பின்வருமாறு.

1. மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் ரயில் எண் 42401 (காலை 04:15 மணிக்கு மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸிலிருந்து புறப்படும் EMU ரயில்), ஏளாவூர் மற்றும் சூலூர்பேட்டை நிலையங்களுக்கு இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

2. மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் ரயில் எண் 42403 (காலை 05:00 மணிக்கு மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸிலிருந்து புறப்படும் EMU ரயில்), டாடா மற்றும் சூலூர்பேட்டை நிலையங்களுக்கு இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

3. சூலூர்பேட்டை - மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் இடையே இயக்கப்படும் ரயில் எண் 42406 (காலை 06:45 மணிக்கு சூலூர்பேட்டையிலிருந்து புறப்படும் EMU ரயில்), சூலூர்பேட்டை மற்றும் ஏளாவூர் நிலையங்களுக்கு இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

4. சூலூர்பேட்டை - சென்னை கடற்கரை (Chennai Beach) இடையே இயக்கப்படும் ரயில் எண் 42802 (காலை 07:25 மணிக்கு சூலூர்பேட்டையிலிருந்து புறப்படும் EMU ரயில்), சூலூர்பேட்டை மற்றும் டாடா நிலையங்களுக்கு இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ரெயில் டிக்கெட் முன்பதிவு: ரூ.2,000-க்கு மேல் UPI மூலம் செலுத்தினால் கூடுதல் கட்டணமா?
தாம்பரம் ரயில்வே சந்திப்பு
logo
Kalki Online
kalkionline.com