ரெயில் டிக்கெட் முன்பதிவு: ரூ.2,000-க்கு மேல் UPI மூலம் செலுத்தினால் கூடுதல் கட்டணமா?

UPI பரிவர்த்தனைகள் தொடர்பாக இந்திய தேசியக் கொடுப்பனவுக் கழகம் (NPCI) சில தினங்களுக்கு முன்பு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.
UPI பரிவர்த்தனை
UPI பரிவர்த்தனைAI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

UPI பரிவர்த்தனைகளுக்காக ஒரு புதிய கட்டண முறையை இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் ( NPCI ) அமல்படுத்தியுள்ளது. இந்தப் புதிய கட்டண முறையின்படி 2,000 ரூபாயைத் தாண்டும் வணிகர்களின் UPI பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் விதிக்கப்படும்.

அதன்படி, வரும் அக்டோபர் 15, 2026 முதல் UPI பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டண விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. இந்தியாவில் நடக்கும் மொத்த யுபிஐ வணிகப் பரிவர்த்தனைகளில் 96% பரிவர்த்தனைகள் ரூ.2,000-க்கு உட்பட்டவைதான். அதனால் ரூ.2,000 வரையிலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணம் கிடையாது.

வணிக நிறுவனங்களுக்கு UPI மூலம் செய்யப்படும் ரூ.2,000க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் வரை வணிக தள்ளுபடி வீதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, அக்டோபர் 15 முதல் UPI மூலம் ரூ. 2,000-க்கு மேல் செய்யப்படும் ரெயில்வே டிக்கெட் முன்பதிவுகளுக்கு வணிகர் தள்ளுபடி விகிதமாக MDR (Merchant Discount Rate) நிலையாக ரூ. 5 விதிக்கப்படும். இருப்பினும், பயணிகள் இந்த கூடுதல் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சேவைக்கட்டணம் வணிகர் தரப்பிலேயே வசூலிக்கப்படும்.

எனவே, UPI மூலம் ரூ.3,000 மதிப்பிலான ரெயில் டிக்கெட்டை முன்பதிவு செய்தால், புதிய MDR விதியின் காரணமாக நீங்கள் ரூ.3,005 செலுத்த வேண்டிய அவசியமில்லை.

பொதுமக்கள் UPI மூலம் ரூ.2,000க்கு மேல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, டிக்கெட் கட்டணத்தை தவிர வேறு எந்த கூடுதல் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. வங்கிகளும் வணிகர்களும் இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தக்கூடாது என்று மத்திய நிதி அமைச்சகமும் அறிவுறுத்தியுள்ளது.

வழக்கமான வர்த்தக நிறுவனங்களில் ரூ.10,000 மதிப்பிலான பொருளை UPI மூலம் வாங்கும் போது, 0.4 சதவீத MDR அடிப்படையில் ரூ.40 வரை கட்டணம் விதிக்கப்படும்.

UPI train
UPI trainAI image

ஆனால், ரெயில்வே டிக்கெட் முன்பதிவில் தொகை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அதாவது ரூ.5,000 அல்லது ரூ.10,000 ஆக இருந்தாலும், நிலையான சேவைக் கட்டணமாக ரூ.5 மட்டுமே கணக்கிடப்படும். அதேபோல, ரூ.2,000 வரை செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு எந்தவித MDR கட்டணமும் கிடையாது. மேலும், தனிநபர்களுக்கு இடையேயான (Person-to-Person) பணப்பரிமாற்றங்கள் எப்போதும் போல முற்றிலும் இலவசமாகவே தொடரும்.

ரூ.2,000 வரையிலான UPI பரிவர்த்தனைகள் புதிய MDR வரம்பிற்கு வெளியே தொடரும், அதே வேளையில் நபருக்கு நபர் செய்யப்படும் UPI பணப்பரிமாற்றங்கள் தொகை எதுவாக இருந்தாலும் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பெட்ரோல் பங்குகளில் ரூ.2000-க்கு மேல் UPI வேலை செய்யாதா? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
UPI பரிவர்த்தனை

தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் மற்றும் பயன்பாட்டுக் கட்டணங்கள் (Utility payments) போன்ற துறைகளுடன் சேர்த்து ரெயில்வே டிக்கெட் முன்பதிவும் ஒரு சிறப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஒரு தனிப்பட்ட பயணிக்கு ரூ.5 என்பது சிறிய தொகையாகத் தோன்றினாலும், நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் இணையவழியில் டிக்கெட் முன்பதிவு செய்வதால், ரெயில்வே மற்றும் IRCTC நிர்வாகத்திற்கு இது குறிப்பிடத்தக்க தொகையாகும்.

உதாரணமாக, தினமும் ரூ.2,000க்கு மேல் UPI மூலம் 1 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டால், ஒரு நாளைக்கு ரூ.5 லட்சம் வீதம் ஆண்டிற்கு சுமார் ரூ.18.25 கோடி வரை பரிவர்த்தனை கட்டணமாக வரும். இந்தத் தொகையை ரெயில்வே, IRCTC, வங்கிகள் மற்றும் கட்டணச் சேவை நிறுவனங்கள் எவ்வாறு பகிர்ந்துகொள்ளப் போகின்றன என்பதைப் பொறுத்தே அதன் நிதித் தாக்கம் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
நீங்களும் UPI பயன்படுத்துகிறீர்களா..?இதற்கெல்லாம் ஒரு பைசா கூட கட்டணம் இல்லை..!
UPI பரிவர்த்தனை

சுருக்கமாக கூறவேண்டுமென்றால், அக்டோபர் 15க்குப் பிறகும் UPI மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு எந்தவித கூடுதல் கட்டணச் சுமையும் இருக்காது. இந்த ரூ.5 கட்டணம் வணிகர் தரப்பிற்கே பொருந்துமே தவிர, பயணிகளுக்கு அல்ல என்பது உறுதியாகியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com