

சென்னையில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் முயற்சியில், அரசு ஆங்காங்கே மேம்பாலங்கள் கட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக,சென்னை, சர்தார் பட்டேல் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், சர்தார் பட்டேல் சாலையையும் – ராஜீவ் காந்தி சாலையையும் இணைக்கும் வகையில், மத்திய கைலாஷ் சந்திப்பில் “L” வடிவ மேம்பாலம் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் L வடிவ மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. அனைத்து பணிகளையும் முடித்து, பிப்ரவரியில் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே இந்த பாலம் மிகவும் ஆபத்தானதாக உள்ளது என பலர் கருது கூறி வருகின்றனர் அதற்கு காரணம் பாலத்தின் உச்சியில் ஒரு அபாயகரமான வளைவு இருப்பது தான். இந்த கூர்மையான வளைவு, வாகன ஓட்டிகளிடையே அச்சத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம் இந்த மேம்பாலம் இப்படி கட்டப்பட்டதற்கு பின்னால் சில காரணங்கள் உள்ளதையும் சில நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
மத்திய கைலாஷ் சந்திப்பு என்பது மிகவும் குறுகலான மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். அங்கு ஒரு மேம்பாலம் கட்டும்போது, ஏற்கெனவே இருக்கும் கட்டிடங்கள், அருகே உள்ள கோயில் மற்றும் மெட்ரோ ரயில் தூண்களை இடிக்காமல் பாலத்தை அமைக்க வேண்டிய கட்டாயம் நெடுஞ்சாலைத் துறைக்கு இருந்தது. இந்த இட நெருக்கடியால் தான் அந்த வளைவு மிகக் கூர்மையாக அமைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.
இத்தகைய கூர்மையான வளைவுகள் கொண்ட பாலங்களில் வாகனங்களின் வேகத்தை 20 முதல் 30 கி.மீ ஆகக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகப் பாலத்தில் வேகத்தடைகள் (Rumble strips), எச்சரிக்கை பலகைகள், ஒளிரும் பிரதிபலிப்பான்கள் (Reflectors) மற்றும் விபத்து காலங்களில் வாகனங்கள் கீழே விழாத வண்ணம் சிதறாத பலமான தடுப்புச் சுவர்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இத்தகைய பாதுகாப்பு ஏற்படுகளுடன் தான் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கைலாஷ் மேம்பாலத்தை பிப்.16ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்.சென்னை அடையாறு மத்திய கைலாஷ் மேம்பாலத்தை பிப்.16ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
இந்நிலையில், இந்தப் பாலத்தின் திறப்பு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ளார். வரும் பிப்ரவரி 16-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மத்திய கைலாஷ் மேம்பாலத்தைத் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். இந்தப் பாலம் திறக்கப்படுவதன் மூலம் ஐடி காரிடார் எனப்படும் ஓஎம்ஆர் சாலையில் நிலவும் நீண்ட நேரப் போக்குவரத்து நெரிசலுக்குப் பெரிய அளவில் தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது.