#JUST IN: விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் செல்லும்.! வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.!

Tax issue
Vijay
Updated on

கடந்த 2015 ஆம் ஆண்டு சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் புலி திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் விஜய் தான் வாங்கிய சம்பளத்தில் ரூ.15 கோடியை கணக்கில் காட்டாததால், வருமான வரித் துறை இவருக்கு ரூ1.5 கோடியை அபராதமாக விதித்தது.

இந்நிலையில் இதனைத் எதிர்த்து மேல்முறையீடு செய்த விஜய்யின் வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் சரியே என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தீர்ப்பு வழங்கி, விஜய்யின் மனுவையும் தள்ளுபடி செய்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான புலி திரைப்படம் குழந்தைகளுக்கானது எந்த விளம்பரப்படுத்தப்பட்டது இதன் காரணமாகவே இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் வருமான வரி தாக்கல் செய்யும் போது விஜய் புலி படத்திற்கு வாங்கிய சம்பளத்தில் ரூ.15 கோடியை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

விஜய்யின் மீதான குற்றத்தை விசாரித்த வருமான வரித் துறை, வருமானத்தை கணக்கில் காட்டாத குற்றத்திற்காக விஜய்க்கு 10% அதாவது ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து விஜய் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “நடிகர் விஜய் புலி படத்திற்கு வாங்கிய சம்பளத்தை சரியாக கணக்கு காட்டவில்லை என்பது நிரூபணமானதால், ஏற்கனவே வருமான வரித்துறை விதித்த அபராதம் செல்லும். இதில் எந்தவித விதிமீறலும் செய்யப்படவில்லை.

மேலும் விஜய் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்:
ஞாபக சக்தியின் ஜீனியஸ்.! உலகை வியக்க வைத்த தமிழ்நாட்டு குழந்தை.!
Tax issue

ஏற்கனவே கரூர் வழக்கு மற்றும் ஜனநாயகன் சென்சார் வழக்கு ஆகவே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், தற்போது வருமானத்தை மறைத்த வழக்கு விஜய்க்கு எதிராக முடிந்திருக்கிறது. இதன் காரணமாக நடிகர் விஜய் தற்போது கவலையில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
தவெக vs திமுக: காங்கிரஸ் எந்தப் பக்கம்? தமிழக அரசியலில் நடக்கப் போகும் ட்விஸ்ட்.!
Tax issue
logo
Kalki Online
kalkionline.com