பிரம்மபுத்ராவை வளைக்கும் சீனா: இந்தியாவின் நீர் ஆதாரத்திற்கு பேராபத்தா?

Water War
Worlds Biggest Dam
Updated on

ஆசிய கண்டத்தின் வற்றாத ஜீவநதிகளில் மிகவும் முக்கியமானது பிரம்மபுத்ரா. இது திபெத்திய எல்லையில் தொடங்கி சீனா, இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் மிக நீண்ட நதியாக ஆங்காங்கே ஒரு பெயருடன் பாய்ந்தோடுகிறது.

இந்தியாவிற்கும், வங்கதேசத்திற்கும் முக்கிய நீராதாரமாக இருக்கும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கில் அணையைக் கட்ட சீனா கடந்த சில ஆண்டுகளாகவே முயற்சி மேற்கொண்டு வந்தது. இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டது. சீனாவில் பாயும் ‘யார்லூங் சாங்போ’ ஆற்றில் மோடு புனல் மின்நிலைய அணையைக் கட்டுவதற்கான தொடக்க விழா 2025 ஜூலை மாதத்தில் நடைபெற்றது.

இந்தத் திட்டத்திற்கு 1.67 பில்லியன் டாலரை ஒதுக்கியது சீனா. இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால், த்ரி கோர்ஜஸ் அணையைக் காட்டிலும் பெரிதாகவும், 3 மடங்கு அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடியதாகவும் இருக்கும்.

இந்நிலையில் தற்போது அணை கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை சீனா தொடங்கியுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கையால் இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளும் கவலையில் உறைந்துள்ளன. ஏற்கனவே பிரம்மபுத்ரா குறுக்கே அணை கட்ட இருநாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் அணை கட்டுவது எங்கள் உரிமை என சீனா பதிலளித்தது.

எல்லையைத் தாண்டி தெற்கு திசை நோக்கி இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பாயும் முக்கிய நீர் ஆதாரமான யார்லூங் சாங்போ ஆற்றை சீனா கட்டுப்படுத்தி விட்டால், அது மிகப்பெரும் பேரிழப்புகளை ஏற்படுத்தக் கூடும் என வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர். அணையின் கட்டுமானம் முடிவடைந்தால் சியாங், பிரம்மபுத்ரா மற்றும் ஜமுனா ஆகிய பல நதிகள் கணிசமான அளவில் வறண்டு விடும்.

குறிப்பாக இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான பாதிப்பை சந்திக்கும். மேலும் அணியின் நீர்மட்டம் உயர்ந்து, திடீரென அணையை சீனா திறந்து விட்டாலும், இந்தியாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடும். இதனைத் தவிர்க்க புதிய மின்நிலைய அணையைக் கட்ட இந்தியாவும் திட்டமிட்டு வருகிறது.

யார்லுங் சாங்போ நம்சா பர்வா மலையைச் சுற்றியுள்ள ‘தி கிரேட் பெண்ட்’ என அழைக்கப்படும் யு (U) வளைவுப் பகுதியில் தான் சீனா அணையைக் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளது. சுரங்கங்கள் மூலம் தண்ணீரை திசை திருப்பி, 5 அடுக்கடுக்கான மின் நிலையங்களை உருவாக்க சீனப் பொறியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த அணையின் மூலமாக கிடைக்கும் மின்சாரம், திபெத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, கிழக்கு மாகாணங்களுக்கும் உதவிகரமாக இருக்கும்.

China Build a Dam
Dam
இதையும் படியுங்கள்:
மீண்டும் எழுந்த சர்ச்சை..!மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்..!!
Water War

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பிரம்மபுத்ராவின் குறுக்கே அணையை கட்ட சீனா பணிகளைத் தொடங்கி இருப்பதால், சர்வதேச அளவில் இது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இருந்து வெறும் 50 கிலோமீட்டர் தொலைவில் தான் இந்த அணை கட்டப்படுகிறது. இந்த அணை மூலம், இந்தியாவின் மீது நீர் ஆயுதத்தை சீனா உபயோகிப்பதாக வல்லநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆஸ்திரேலியாவின் லோவி இன்ஸ்டிட்யூட் எனும் சிந்தனைக் குழு, பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே சீனா அணையைக் கட்டினால், இந்தியப் பொருளாதாரத்தைக் சீனாவால் கட்டுப்படுத்த முடியும் என 2020-ம் ஆண்டிலேயே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: காலையிலேயே ஷாக்.. மளமளவென உயர்ந்த தங்கம் விலை.!
Water War
logo
Kalki Online
kalkionline.com