ஒருகாலத்தில் அதிக மக்கள் தொகை வைத்திருந்த சீனா, தற்போது சரிவை சந்தித்து வருவது சீன அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்திருக்கிறது.
முன்பெல்லாம் இந்தியாவில் ஒரு நபர் 10 குழந்தைகள் வரை பெற்று வளர்த்தனர். ஆனால், படிபடியாக இந்த எண்ணிக்கை குறைந்து தற்போது ஒரு குழந்தையில் வந்து நிற்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் ஒரு குழந்தையை படித்து ஆளாக்கி வளர்ப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடுகிறது.
இதனால் மக்கள் தொகை குறைந்து வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளில் ஏற்கனவே இந்த அச்சம் வந்துவிட்டது.
ஆம்! தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தங்கள் நாட்டின் மக்கள் தொகை குறைந்து வருவதாக சீனா அறிவித்தது. 2024இல் மக்கள் தொகை 14 லட்சம் குறைந்து 140 கோடியே 8 லட்சமாக இருந்தது என்கிறது சீன அரசு.
இந்த நிலை சீனாவில் மட்டுமல்ல ஜப்பன், தென்கொரியா, ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது.
ஐநாவின் அறிக்கையில் உலக நாடுகளில் 63 நாடுகளின் மக்கள் தொகை முதலில் உச்சத்தை அடைந்து பின் சரிவை கண்டிருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் 30 ஆண்டுகளில் இந்த லிஸ்ட்டில் இன்னும் 48 நாடுகள் சேர்ந்ததாக கூறப்படுகிறது. தற்போது உலகின் மக்கள் தொகை 820 கோடியாக உள்ளதாகவும் இது 60 ஆண்டுகளில் ஆயிரத்து 30 கோடி என்ற உச்சத்தை எட்டி அது பின்னர் சரியத் தொடங்கும் என்றும் ஐநா நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதுபோன்ற நிலையில்தான் சீன அரசு தனது நாட்டின் மக்கள் தொகையை அதிகரிக்க பல திட்டங்களை கொண்டு வருகிறது. ஆனால், அப்படியும் எந்த முன்னேற்றம் இல்லை.
இந்த குறைவிற்கான காரணங்களை சீன அரசு ஆய்வு செய்தது. அதில் சில விஷயங்கள் வெளிவந்தன.
இந்த மக்கள் தொகை குறைவிற்கு இளைஞர்கள் திருமணம் செய்துக்கொள்ளாதது முக்கியமான காரணமாக இருக்கிறது. கடந்த ஆண்டு சுமார் 60 லட்சம் தம்பதிகள் மட்டுமே தங்கள் திருமணங்களைப் பதிவு செய்துள்ளனர். இது 2023ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 20.5 சதவீதம் குறைவாகும்.. சீனாவில் 1986 முதல் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு வரும் சூழலில், 2024ல் தான் மிகக் குறைந்த திருமணங்கள் பதிவாகியுள்ளன.
திருமணங்கள் குறைவதால் குழந்தை பிறப்பும் குறைகிறது. இந்த இரண்டு காரணங்களும் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. குழந்தை பிறப்பு காரணமாக முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், பொருளாதார சிக்கலும் அதிகரித்துள்ளது.