சமீபக்காலமாக கில் சரியான ஃபார்மில் இல்லாத நிலையில், தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பமாகவுள்ளது. தொடரில் மொத்தம் 8 அணிகள் மோதவுள்ளன. 29 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் முதல்முறையாக சாம்பியன்ஸ் ட்ராபி நடைபெறவுள்ளது. பாகிஸ்தானில் ராவல்பிண்டி, லாகூர் மற்றும் கராச்சி ஆகிய மூன்று இடங்களில் போட்டிகள் நடத்தப்படும். ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபியின் ஒன்பதாவது தொடர் மொத்தமாக 19 நாட்கள் நடைபெறும்.
குரூப் ஏ வில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் இடம் பெற்றிருக்கிறது. குரூப் பி யில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பிடித்திருக்கிறது. இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நடத்தப்படும். சாம்பியன்ஸ் ட்ராபிக்கான இந்திய அணி வீரர்களை கடந்த சனிக்கிழமை பிசிசிஐ அறிவித்தது. ரோஹித் ஷர்மா கேப்டன் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால், யாரும் எதிர்பாரா விதமாக துணை கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். மேலும் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்திய அணியில் உள்ளனர்.
சமீபக்காலமாக சரியாக விளையாடாத சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டதிலிருந்து பல சர்ச்சைகள் எழுந்தன. கிரிக்கெட் வட்டாரத்தினர் பலரும் விமர்சனங்கள் கூறினர் .
இப்படியான நிலையில், ஒரு நாள் போட்டிகளில் தான் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை அடுத்தடுத்து இரண்டு அரை சதங்களை அடித்து நிரூபித்து இருக்கிறார் சுப்மன் கில். இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடும் ஒருநாள் போட்டிகளில்தான் சுப்மன் கில் அரை சதங்கள் அடித்திருக்கிறார்.
மேலும் ஐசிசி ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன்களில் தரவரிசை பட்டியலில் முதலிடத்தையும் பிடித்து இருக்கிறார். சில வருடங்கள் கழித்து மீண்டும் தனது இடத்திற்கு திரும்பியுள்ளார். சாம்பியன்ஸ் ட்ராபி நெருங்கி வரும் நிலையில், சுப்மன் கில் மீண்டும் ஃபார்முக்கு வந்தது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.