

விரைவில் மாபெரும் கனவுத்திட்டம் அறிவிக்கப்படும் என்றும் "உங்க கனவ சொல்லுங்க" திட்டம் 2030ஆம் ஆண்டு தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கூறும் திட்டமாக இருக்கும் என்றும் உறுதியாக அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்ட பல்வேறு வகையான அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் "உங்க கனவ சொல்லுங்க" என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று துவங்கி வைத்தார்.
முதல்வரின் உரையிலிருந்து சில துளிகள்..
அடுத்த 30 நாட்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்களை அரசின் குழு நேரில் சந்திக்கும் நேரில் சந்திக்கும் குழுவினரிடம் உங்கள் கனவுகளை கூறினால் அதை டிஜிட்டலில் பதிவேற்றம் செய்வார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களின் கனவைக் கேட்டு அதை நிறைவேற்றும் நாளாக உங்க கனவை சொல்லுங்க திட்டம் அமைந்துள்ளது. மருத்துவச் சுற்றுலாவின் மையமாக தமிழ்நாடு விளங்குகிறது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐநா பாராட்டு தந்துள்ளது.
தேர்தலுக்கு முன் திருச்சியில் தந்த ஏழு வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம். தமிழ்நாட்டில் இரண்டாம் மூன்றாம் நிலை நகரங்களும் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. காரணம் நாட்டிலேயே முதலீடு செய்பவரின் முதல் தேர்வாக தமிழ்நாடு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இரண்டாம் மூன்றாம் நிலை நகரங்களும் இதனால் வளர்ந்துள்ளது .
கல்வியில் முன்னேறிய மாநிலமாக நமது தமிழ்நாடு கல்வி செயல்பாடுகளில் மற்ற மாநிலங்களை விட முதன்மை இடத்தில் இருப்பது நமது பெருமை. தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு ஆளுநர் முட்டுக்கட்டை விட்ட போதும் பல திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. 505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த பொங்கல் மகிழ்ச்சி பொங்கலாக இருப்பதற்காகவே ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 3000 ரூபாய் தருகிறோம். நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் திட்டங்களை நிறைவேற்றுகிறோம். அதிமுக ஆட்சியில் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்யாது ஓடினர். ஆனால் திமுக ஆட்சியில் ரூபாய் பத்து லட்சம் கோடி முதலீடுகள் ஈர்த்துள்ளது. ரூபாய் 8000 கோடி கோவில் சொத்துக்களை மீட்டு இருக்கிறோம். 4000 கோவில்கள் குட முழுக்கு செய்யப்பட்டுள்ளது.
சமூக வளர்ச்சி, விவசாய மற்றும் மீன் பிடிப்பது, வேலை வாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட 7 துறைகளில் தன்னிறைவு பெற்ற தமிழ் நாடாக சாதித்துக் கொண்டிருக்கிறோம். மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களை நேசி, அவரிடம் இருந்து கற்றுக்கொள் என அண்ணா சொல்வதை எல்லாம் இதயத்தில் நிறுத்தி செயல்பட கூடியவர்தான் கருணாநிதியின் மகனான இந்த ஸ்டாலின். அதனால் தான் ஒரு கட்சியாக இல்லாமல் ஒரு இனத்தின் ஆட்சியாக திராவிட இனத்தின் ஆட்சியாக உள்ளது.
ஆட்சி என்பது முதலமைச்சரான எனது கனவு மட்டும் அல்ல. வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைத்து மக்களின் கனவுகளையும் நிறைவேற்றத் தான் அப்போதுதான் நாடு வளர்ச்சி அடையும் உங்கள் கனவுகளை நிறைவேறினால் தமிழ்நாடு முன்னேறும்.
மகிழ்ச்சி அடையும். முயற்சி வளர்ச்சி அடையும். வரலாற்றை புரட்டிப் பாருங்கள் நமது கனவுகள் நமது உழைப்பால் நடைபெற்றது. சுயமரியாதையுடன் நமது தமிழ் சமூகம் தலை நிமிர வேண்டும் என்பதே குறிக்கோள்.
விரைவில் மாபெரும் கனவு திட்டம் அறிவிக்கப்படும். வெல்வோம், ஒன்றாக மண்மொழி மானம் காக்க நாடே திரும்பிப் பார்க்கும் நம்பர் ஒன் மாநிலமாக இருக்கிறோம் என பெருமிதத்துடன் குறிப்பிட்டார் முதல்வர்.
உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவேன். உங்கள் எண்ணங்களுக்கு உருவம் கொடுப்பேன். நமது தமிழ்நாட்டை தலை சிறந்த மாநிலமாக மாற்றிக் காட்டுவோம் என உறுதியளித்த முதல்வரின் உரை கூடியிருந்த மக்களிடம் வரவேற்பு பெற்றது.
குறிப்பாக அரசின் கல்வி நலத்திட்டங்களால் பயன் பெற்று வாழ்வில் பேரியம் நிலைக்கு வரும் மாணவ மாணவிகள் அப்போது திமுக அரசை நிச்சயம் நினைவு கூர்வார்கள் என்ற முதல்வருக்கு கைத்தட்டல் கிடைத்தது.